"ஆபாச வீடியோ"வில் திடீர்னு தோன்றிய உருவம்.. அதிர்ந்து போன பெண்.. மொத்தம் 8 பேராம்.. அடகடவுளே
தோழியின் போட்டோவை ஆபாச வெப்சைட்டில் பதிவிட்ட 8 பேரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்
திருவனந்தபுரம்: பழிக்குப்பழி வாங்குவதாக நினைத்து, ஒரு பெண்ணின் போட்டோவை ஆபாச வெப்சைட்டில் அப்லோடு செய்து, கும்பலாக சிக்கி உள்ளனர் 8 பேர்.. என்ன நடந்தது கேரளாவில்?
கடந்த மாதம் மும்பையில் ஒரு சம்பவம் நடந்தது.. 31 வயதான இளைஞர் ஒருவர், மசாஜ் சேவைகள் குறித்து செல்போனில் பார்த்து கொண்டிருந்தார்...
மசாஜ் சேவைகள் எப்படி இருக்கின்றன என்று அந்த வெப்சைட்களை ஜாலியாக பார்த்து கொண்டிருந்தார்... அப்போது மசாஜ் செய்யும் பெண்களின் போட்டோக்கள், ஒரு வெப்சைட்டில் இருந்தன...

மசாஜ்
உடனே அந்த போட்டோக்களை ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு வந்தபோது, திடீரென அதில் தன்னுடைய மனைவி போட்டோ இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.. மனைவி மட்டுமல்ல, தன்னுடைய தங்கையின் போட்டோவும் அதில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர், உடனடியாக அந்த வெப்சைட் நிறுவனத்தை இளைஞர் தொடர்பு கொண்டு, தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று சொன்னார்.. எதிர்முனையில் பேசிய பெண்ணும், கார் நகரில் உள்ள ஹோட்டலில் வந்து தன்னை சந்திக்குமாறு சொன்னார்.. அந்த ஹோட்டலுக்கு போலீசுடன் சென்ற இளைஞர், வெப்சைட்டில் இருந்த சகோதரி, மனைவியின் போட்டோக்கள் குறித்து கேட்டார்..

நைஸாக நழுவினார்
ஆனால், அந்த பெண் நைசாக நழுவ பார்த்தார்.. உடனே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அந்த வெப்சைட்டின் பெயர் எஸ்கார்ட்.. இந்த பெண்ணின் பெயர் ரேஷ்மா.. ஃபேஸ்புக், ட்விட்டர்களில் யாராவது அழகான பெண்கள் போட்டோக்கள் இருந்தால், இந்த வெப்சைட்டில் அப்லோடு செய்துவிடுவாராம் ரேஷ்மா.. இளைஞரின் சகோதரியும், மனைவியும், அவர்களது ஃபேஸ்புக், ட்விட்டர்களில், தங்கள் போட்டோக்களை வைத்திருந்திருக்கிறார்கள்.. அவைகளை எடுத்துதான், ரேஷ்மா இந்த வேலையை செய்துள்ளார்.. கடைசியில் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.. ஆபாச வெப்சைட்டில், பெண் ஒருவரே இப்படிப்பட்ட காரியத்தை செய்திருந்து கடுமையான அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.

பழிக்குப்பழி
இப்போதும் ஒரு சம்பவம் பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக நடந்துள்ளது.. கேரளாவின் கட்டக்கடை பகுதியில் கடந்த ஜனவரி 25 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த பெண் திருமணமானவர்.. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இந்த பெண்ணின் போட்டோ, போன் நம்பர், மற்றும் அந்த பெண்ணின் வயது உட்பட அனைத்து விவரங்களும் அடங்கிய பயோடேட்டா ஒன்று ஆபாச வெப்சைட் ஒன்றில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, சில நாட்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு, பல்வேறு நம்பர்களில் இருந்து ஆபாசமான மெசேஜ்கள் வர ஆரம்பித்துவிட்டன..

மெசேஜ்கள்
இதை பார்த்ததும் அந்த பெண் அதிர்ச்சியாகி விட்டார்.. எனவே, உடனடியாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் தன் கணவருக்கு விஷயத்தை சொல்லி கதறி உள்ளார்.. இதை கேட்டு அதிர்ந்த கணவரும் போலீசாரின் உதவியை நாடினார்.. செல்போனுக்கு வந்த மெசேஜ்களின் அடிப்படையில் கடந்த ஜனவரியிலேயே புகாரும் தரப்பட்டது.. சந்தேகத்திற்கிடமான நபர்களின் போன்கள், பெயர்கள், உட்பட விவரங்கள் அனைத்தும், சைபர் கிரைம் போலீசுக்கு சொல்லி உள்ளார்.. அந்த புகாரின் பேரில் போலீசார் தங்கள் விசாரணையை துவக்கினர்.. அப்போதுதான், பெண்ணின் படம் தவறாக பயன்படுத்தப்பட்டது உறுதியானது..

பேட்ச்மேட்ஸ்
இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.. நடந்தது என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண், கைதான 8 பேர் உட்பட இவர்கள் அனைவருமே ஒரே ஸ்கூலில் ஒன்றாக படித்தவர்களாம்.. சமீபத்தில் முன்னாள் மாணவர்கள் 207 பேர்களும் ஒன்றாக சந்தித்துள்ளனர்.. கெட் டூ கெதர் நிகழ்ச்சியில் நீண்ட காலம் கழித்து சேர்ந்து சந்தித்து பேசியுள்ளனர்.. இவர்கள் அனைவரும் இறுதியாக குரூப் போட்டோவும் சேர்ந்து எடுத்து கொண்டுள்ளனர். அந்த குரூப் போட்டோவில் இருந்த போட்டோவை எடுத்துதான், ஆபாச வெப்சைட்டில் பதிவிட செய்து, அந்த பெண்ணின் போன் நம்பரையும் ஷேர் செய்திருக்கிறார்கள்.

ஆபாச வெப்சைட்
அந்த பெண், ஒருமுறை தங்களை வேண்டுமென்றே சிக்க வைத்துவிட்டதாகவும் அதனால்தான் இப்படி பழிவாங்கியதாகவும் கைதானவர்கள் சொல்கிறார்கள்.. ஆனால், அந்த பெண்ணோ, தன் போட்டோவை தவறாக சிக்க வைத்ததால், தன்மீது வீண் பழி போடுகிறார்கள் என்றும் சொல்கிறார்.. இப்படி மாறி மாறி புகார்களை சொல்லி உள்ளதால், இதில் எது உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், தன்னுடன் படித்த தோழியின் போட்டோவையே, பேட்ச்மேட்கள் ஆபாச வெப்சைட்டில் பதிவேற்றம் செய்த சம்பவம் கேரளாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. தனிப்பட்ட பகையை தீர்த்து கொள்ளவே இப்படி சம்பவம் நடந்ததாக இரு தரப்பிலும் சொல்லப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமாகி உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்?












Click it and Unblock the Notifications