ஈவு இரக்கமே இல்லாமல்.. இப்படி நம்ப வச்சு! வாட்சப்பில் "விஷக் காதலி" சொன்ன விஷயம்! லீக்கான சாட்டிங்
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த இளைஞர் ஷாரோன் அவரின் காதலி கிரீஷ்மா மூலம் விஷம் வைத்து கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வாட்சப் சாட்கள் இணையத்தில் கசிந்து உள்ளன.
Recommended Video

கேரளாவை சேர்ந்த காதலனுக்கு காதலி ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா எல்லையில் களியக்காவிளை தாண்டி பாறசாலை பகுதியில் வசித்து வந்தார் ஷாரோன் ராஜ். 23 வயதே ஆன இவர் கல்லூரி படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் கிரீஷ்மா என்ற பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
கிரீஷ்மாதான் சமீபத்தில் ஷாரோனை திருமணம் செய்து கொண்டு, அதன்பின் அவருக்கு விஷம் கலந்த கஷாயத்தை கொடுத்து கொலை செய்துள்ளார்.

கொலை
கிரிஷ்மாவின் முதல் கணவன் இறந்துவிடுவான் என்று ஜோசியர் ஒருவர் சில நாட்களுக்கு முன் சொல்லி இருக்கிறார். இதனால் ஷாரோனை கல்யாணம் செய்து, அவரை கொன்றுவிட்டு, அதன்பின் வீட்டில் பணக்கார நபரை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு இந்த கொலையை கிரீஷ்மா செய்துள்ளார். தனது காதலன் இறந்தால் பிரச்சனை இல்லை. அவனுக்கு காசு இல்லை. அதனால் அவனையே முதலில் திருமணம் செய்து கொள்ளலாம், பின்னர் பணக்கார நபரை திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளார் கிரீஷ்மா. ஷாரோன் ராஜை தனது பெற்றோர்கள் முன்னிலையில் சம்பிரதாயத்திற்கு கிரீஷ்மா திருமணம் செய்துள்ளார்.

ஷாரோன்
எப்படியும் ஷாரோன் ராஜ் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் கிரீஷ்மா திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் எப்போது இறப்பார் என்று கிரீஷ்மாவிற்கு தெரியவில்லை. இதன் காரணமாகவே அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். கஷாயத்தில் விஷம் கொடுத்து கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஷாரோன் கடைசியாக கிரீஷ்மாவிற்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ்கள் வைரலாகி வருகின்றன. அதில், ஷாரோன் எனக்கு மாலையில் இருந்து வாந்தி வந்து கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

கிரீஷ்மா
அதற்கு கிரீஷ்மா உனக்கு நான் கஷாயம் கொடுத்தேன். அதனால் இப்படி வாந்தி வந்து இருக்கலாம். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. உனக்கு வாந்தி வருவது.உனக்கு இப்படி வாந்தி வர நானே காரணம் ஆகிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. உனக்கு உடம்பு சரியாகிவிடும். இந்த கஷாயம் உடம்பை சரி செய்துவிடும் என்று கிரீஷ்மா கூறியுள்ளார். எனக்கு முடியவில்லை. எனக்கு உடம்பு மிகவும் வலிக்கிறது. வயிறு வலிக்கிறது. வாந்தி வந்துகொண்டே இருக்கிறது.

சமாதானம்
எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று ஷாரோன் மீண்டும் கூறியுள்ளார். அதற்கு கிரீஷ்மா.. என்னால் நான் கொடுத்த கஷாயத்தால்தான். உனக்கு சரியாகிவிடும். எனக்கும் முன்னர் இப்படி நடந்து இருக்கிறது. சரியாகிவிடும் என்று நம்ப வைத்து, அவருக்கு சமாதானம் சொல்லி இருக்கிறார். அதன் பின் வாந்தி எடுத்துவிட்டு.. எனக்கு பச்சை நிறத்தில் வாந்தி வருகிறது என்று புகார் வைத்துள்ளார் ஷாரோன்.

கஷாயம்
அதற்கு கிரீஷ்மா.. கஷாயம் பச்சை நிறத்தில் இருந்தது அல்லவா. அதனால்தான் வாந்தி அப்படி வருகிறது. கவலைப்படாதே. காலையில் எல்லாம் சரியாகிவிடும். நீ உடம்பு ரொம்ப வலிக்கிறது என்றால் போய் தூங்கு. எல்லாம் சரியாகிவிடும் என்று ஷாரோன் நம்பும்படியாக கூறி இருக்கிறார் கிரீஷ்மா. இந்த சாட்டிங்கில் கூட ஷாரோன் மிகவும் அன்பாக பேசி இருக்கிறார்.

விஷம் கஷாயம்
உனக்கு எதுவும் இல்லையே அதுவரை சந்தோசம். அவர்கள் சாட்டில் இருந்து பார்க்கையில், கிரீஷ்மாவும் கஷாயம் ஒன்றை குடித்து உள்ளார். அது விஷம் கலக்காத கஷாயம். ஷாரோன் அந்த சாட்டில் உனக்கு கஷாயம் குடித்து எதுவும் ஆகவில்லையே, அதுவரை சந்தோசம் என்று கூறியுள்ளார். நான் போய் தூங்குகிறேன்.

நீ கவலைப்படாதே
நீ கவலைப்படாதே என்று அன்பாக கூறியுள்ளார். அதன்பின் அவர்கள் அன்று இரவு சாட் செய்யவில்லை. அதன்பின் மறுநாள் ஷாரோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சாட்டிங்கில் அதற்கான புகைப்படத்தை ஷாரோன் அனுப்பி உள்ளார். நான் மருத்துவமனையில் சேர்ந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால் அப்போது கூட உனக்கு நான் கொடுத்தது விஷம்.. போய் உயிரை காப்பாற்றிக்கொள்ள என்று கிரீஷ்மா கூறவில்லை.

வாட்சப் சாட்
ஷாரோனுக்கு விஷம் உடல் முழுக்க ஏறி உள்ளது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் அவர் மருந்து எதையும் எடுக்காமல் வீட்டில் இருந்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் கிரீஷ்மா விஷம் பற்றி எதுவும் சொல்லாமல் நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறார். அவர் ஈவு இரக்கம் இல்லாமல் இப்படி நடந்து கொண்டது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஷாரோன் - கிரீஷ்மா இடையிலான இந்த சாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications