இதுக்குத்தான் விஷம் கொடுத்தேன்! சர்ச்சில் வைத்து "புது" வாக்குமூலம் தந்த கிரீஷ்மா! அரண்டு போன போலீஸ்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் காதலனை விஷம் கொடுத்து கொலை செய்த கிரீஷ்மா போலீசார் விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த காதலனுக்கு காதலி ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் இந்த கொலை பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் தினமும் வெளியாகி வருகிறது. கேரளா எல்லையில் களியக்காவிளை தாண்டி பாறசாலை பகுதியில் வசித்து வந்தார் ஷாரோன் ராஜ். 23 வயதே ஆன இவர் கல்லூரி படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் கிரீஷ்மா என்ற பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
கிரீஷ்மாதான் சமீபத்தில் ஷரோனை திருமணம் செய்து கொண்டு, அதன்பின் அவருக்கு விஷம் கலந்த கஷாயத்தை கொடுத்து கொலை செய்துள்ளார்.

கொலை
இந்த கொலைக்கான காரணம்தான் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிரிஷ்மாவின் முதல் கணவன் இறந்துவிடுவான் என்று ஜோசியர் ஒருவர் சில நாட்களுக்கு முன் சொல்லி இருக்கிறார். இதனால் ஷரோனை கல்யாணம் செய்து, அவரை கொன்றுவிட்டு, அதன்பின் வீட்டில் பார்த்த ஓரத்தில் பணக்கார நபரை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு இந்த கொலையை கிரீஷ்மா செய்துள்ளார். கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோர் மற்றும் அவரது மாமா ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கிரீஷ்மா ஷரோனை கொலை செய்துள்ளார்.

கிரீஷ்மா
இந்த நிலையில் கிரீஷ்மாவை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை செய்து வருகிறார்கள். பொதுவாக போலீஸ் விசாரணையில் டைம் லைன் உருவாக்க போலீசார் குற்றவாளிகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்வார்கள். உதாரணமாக ஒரு கொலை நடந்தால், கொலைக்கு திட்டம் போடப்பட்டது எங்கே, எப்படி எல்லாம் கொலையாளி செயல்பட்டார், கொலை செய்யப்பட்டவருடன் அவர் எங்கே எல்லாம் சென்றார், அவரை வேவு பார்த்தாரா என்று போலீசார் விசாரணை செய்து ஒரு டைம் லைனை உருவாக்குவார்கள்.

காதலர்கள்
இந்த வழக்கில் இரண்டு பேரும் காதலர்கள் என்பதால் இவர்கள் எங்கே எல்லாம் சென்றார்கள் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதை வைத்து அவர்கள் டைம் லைன் ஒன்றை உருவாக்கி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக வெட்டுக்காடு சர்ச்சிற்கு கிரீஷ்மாவை அழைத்து சென்றனர். அங்குதான் இவர்களுக்குள் திருமணம் நடந்தது. ஷாரோனை திருமணம் செய்தது அங்குதான் என்பதால் சர்ச் பாதரிடம் கிரீஷ்மா முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது.

சர்ச்
சர்ச் அனுமதி இன்றி இவர்கள் திருமணம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு சர்ச்சில் இருக்கும் போது கிரீஷ்மா இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலத்தையும் கொடுத்துள்ளார். அதில்.. எனக்கு திருமணத்தில் விருப்பமே இல்லை. ஷாரோன் சொல்லித்தான் திருமணம் செய்து கொண்டேன். என்னை இங்கே பைக்கில் கூட்டி வந்தார். நாங்கள் சர்ச்சுக்கு வருகிறோம் என்று நினைத்தேன். ஆனால் அவர் திருமணம் செய்யலாம் என்றார்.

யாரும் இல்லை
திருமணம் செய்து கொள்ள அவர்தான் எனக்கு அழுத்தம் கொடுத்தார். எல்லோரும் திருமணம் பற்றி கேட்கிறார்கள். அதனால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். சர்ச்சில் இவர்கள் திருமணம் செய்த போது அங்கே பெரிய அளவில் ஆட்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கிரீஷ்மாவை மற்ற இடங்களுக்கும் அழைத்து சென்று விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் ஒன்றாக சென்ற இடங்களுக்கு எல்லாம் கிரீஷ்மாவை அழைத்து சென்று விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications