சுரேஷ் கோபி வந்துட்டாரு.. "சிவப்பு" மண்ணை துளைக்கும் காவி? ஒரே லிஸ்ட்டில கேரளா பாஜகவின் பெரிய ப்ளான்
திருவனந்தபுரம்: எதிர்பார்த்தபடியே பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் லிஸ்ட் வெளியாகி உள்ளது.. எதிர்பார்த்தபடியே திரிச்சூரின் பாஜக வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், கேரளா அரசியலே பரபரத்து காணப்படுகிறது.
வடமாநிலங்களில் வலுவாக உள்ள பாஜக, தென்மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க பல வருடங்களாகவே முயன்று வருகிறது.. அந்தவகையில், தமிழ்நாட்டை போலவே, கேரளாவில் பாஜகவில் காலூன்ற முடியாத நிலைமை உள்ளது.

பிரபலங்கள்: எனவே, சினிமா நடிகர்கள் மற்றும் பிரபலமானவர்களுக்கு வலையை விரித்து, அதன்மூலம் மக்களின் வாக்குகளை அள்ள முயன்றது.. பாஜக விரித்த வலையில், பிரபல நடிகர்கள் பலர் வந்து விழுந்தனர்...
கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் இந்த வியூகம் ஓரளவு எடுபட்டதையடுத்து, அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றது.. அதற்கு பிறகு, கேரள பாஜகவில் ஏராளமான நடிகர்கள் வலிய வந்து இணைய துவங்கினார்கள்.. ஆனாலும், இணைந்த வேகத்திலேயே, பாஜகவை விட்டு வெளியேறியும் சென்றுவிட்டனர். பலர் சென்றுவிட்டாலும், இன்னமும் பாஜகவுடன் இணக்கமான தொடர்பில் இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி.
என்ன காரணம்: காரணம், நாயர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இவரை தேர்தலில் முன்னிறுத்தி, நாயர் ஓட்டுக்களுக்கு குறி வைத்தது பாஜக.. எனவே, 2016 தேர்தலில் சுரேஷ் கோபிக்கு ராஜ்யசபா சீட்டையும் வழங்கியது. ஆனால், சுரேஷ்கோபியால் மெஜாரிட்டி வாக்குகளை பெற முடியவில்லை.
கடந்த எம்பி தேர்தலிலும், திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபிக்கு சீட் தந்தும்கூட, தோல்வியையே தழுவினார்.. அதேபோல 2 வது இடத்தைகூட பெற முடியாமல், 3வது இடத்தை தக்க வைக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்.. இதற்கு பிறகு, மாநில பாஜக தலைவர் பதவியை எதிர்நோக்கியிருந்தும், அந்த வாய்ப்பு தரப்படவில்லை. இதனால், மேலிட பாஜகவுடன் அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சியை விட்டு வெளியேற போவதாகவும் தகவல்கள் கசிந்தன.
அதுமட்டுமல்ல, சுரேஷ் கோபிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், பிரச்சாரங்களிலும் அவரை வலுவாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கணக்கு போடப்பட்டுள்ளது. அதைவிட முக்கியமாக, வரப்போகும் தேர்தலின்போது, சுரேஷ் கோபியை திருவனந்தபுரம் தொகுதியில் களமிறக்கலாம் என்றும் பாஜக யோசித்துள்ளது.
சசிதரூர்: இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. இந்த தொகுதியில் தற்போது காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் எம்பியாக உள்ளார். அடுத்த முறையும் அவர் இந்த தொகுதியில் போட்டியிட்டால், சுரேஷ் கோபியை களமிறக்கி வெற்றிக்கனியை பறிக்கலாம் என்றும் பாஜக நினைத்தது. .. இதையடுத்து, திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் சுரேஷ் கோபி களமிறக்கப்படலாம் என்றும் செய்திகள் உலா வந்தன.
அதேபோல, சசிதரூருக்கு எதிராக நிர்மலா சீதாராமனை களமிறக்கவும் பாஜக இன்னொரு கணக்கு போட்டது.. நிர்மலா சீதாராமனுக்கு அடுத்தப்படியாக திருவனந்தபுரம் வேட்பாளராக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் அல்லது நடிகர் சுரேஷ் கோபி என்றெல்லாம் சாய்ஸ்கள் சலசலத்தன.
அபார வாக்கு வங்கி: இந்நிலையில், தற்போது, எதிர்பார்த்தபடியே, திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.. பாஜகவுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.
அபாரமான வாக்கு வங்கிகள் சுரேஷ் கோபிக்கு இல்லாவிட்டாலும்கூட, கணிசமான வாக்கு வங்கிகளை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் சுரேஷ் கோபி. இந்த நம்பிக்கையில் நாயர் ஓட்டுக்களை குறி வைத்து, மீண்டும் பாஜக தன்னுடைய காய்நகர்த்தலை கேரளாவில் ஆரம்பித்துள்ளது.
பிரபலங்கள்: வடமாநிலங்களில் பெரும்பாலும் பாஜகவுக்கு கை கொடுத்து உதவும் கவர்ச்சி அரசியல் தென்னகத்திலும் கை கொடுக்குமா? என்று தெரியவில்லை.. ஆனால், மக்களின் ஓட்டுக்களை பெறவேண்டுமானால், பிரபலங்களை களமிறக்குவதையும் தாண்டி, வேறு சில விஷயங்களும் தொகுதி மக்களுக்கு தேவையாக இருக்கிறது. அந்தவகையில், "சிவப்பு" மண்ணான கம்யூனிஸ கேரளாவில் "காவி"யின் நிறம் இனியாவது எடுபடுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications