"சர்ப்ரைஸ்".. மோடியை மொத்த கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள்.. மாற்றம் வரப்போகுது.. பாஜக சுரேந்திரன் நச்
திருவனந்தபுரம்: பிரதமர் மோடி மற்றும் அவரது நிர்வாகம் மீது ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகமும் நம்பிக்கை கொண்டிருப்பதாக கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் பூரித்து கூறியுள்ளார்.
கேரளாவில் வலுவான வாக்கு சதவீதத்தை பெற பாஜக முயன்று கொண்டிருக்கிறது.. குறிப்பாக, சிறுபான்மையினர் வாக்குகளையும் பிரதானமாக குறி வைத்து களமிறங்கி உள்ளது.
அந்தவகையில், ஈஸ்டர் சன்டே நாளை முன்னிட்டு கிறிஸ்துவ மக்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்குள் ஒரு இடத்தை பெறும் முயற்சியின் ஒரு பகுதியாக கேரளா பாஜகவின் முக்கிய தலைவர்கள், கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்புகளையும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் கிறிஸ்துவ மக்கனை சந்திக்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது.

இயேசு போட்டோக்கள்: அதாவது, பிரதமர் மோடியின் உத்தரவின்படி, ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு பல பாஜக தலைவர்கள் சென்றிருக்கிறார்கள்.. பிஷப் இல்லங்களுக்கு உள்ளேயும் வெளியேயும், பிரதமர் மோடியின் ஈஸ்டர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட பாஜகவினர், சோஷியல்மீடியாவில் பாஜகவின் பல்வேறு அதிகாரப்பூர்வ பக்கங்களில், உயிர்த்தெழுந்த இயேசுவின் படங்கள் மற்றும் ஈஸ்டர் முட்டைகளால் தொடர்பான பதிவுகளையும் ஷேர் செய்து வருகிறார்கள்..
மேஜர் ரோல்: இதில் முக்கிய ரோல் வகிப்பது, கேரளா மாநில பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன் என்பதுதான் ஹைலைட் சமாச்சாரமே.. இவர் தன்னுடைய சொந்த மாவட்டமான கோழிக்கோடு பகுதியில் 2 பிஷப்களை சந்தித்து பேசியிருக்கிறார்.. மேலும், மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வி.முரளீதரன் திருவனந்தபுரம் பேராயத் தலைவர் தாமஸ் ஜே நெட்டோவுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.. பாஜகவின் இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்களிடம் இருந்து அமோக ஆதரவு கிடைத்து வருவதாகவும், மோடி தலைமையிலான அரசின் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் சுரேந்திரன் பூரித்து சொல்கிறார்.
ஹேப்பி சுரேந்திரன்: பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் தொடர்ந்து சொல்லும்போது, "கிறிஸ்தவ மதத் தலைவர்களிடம் மட்டுமின்றி, சாதாரண கிறிஸ்தவர்களிடமும் கட்சி மீதான அணுகுமுறையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மற்றும் அவரது நிர்வாகம் மீது ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகமும் நம்பிக்கை கொண்டிருப்பதாக பாஜகவினர் கருதுகின்றனர்.. கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள வடகிழக்கு மாநிலங்களிலும், கோவாவிலும் நல்லாட்சி நடப்பதை அவர்கள் பார்த்துள்ளனர். எங்கும் வரலாறு காணாத வளர்ச்சி காணப்படுகிறது. இந்த வளர்ச்சி கேரளாவிலும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றால், மோடியின் தலைமையும், பாஜக ஆட்சியும் இங்கு தேவை என்பதை கிறிஸ்தவர்கள் உணரத் தொடங்கி விட்டனர்" என்று கூறினார்.
இதனிடையே, கேரள பாஜகவும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில், "பிரதமர் மோடியின் நிர்வாகச் சிறப்பிற்கு எல்லா இடங்களிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. முன்பு பாஜகவுக்கு திரிபுராவில் ஒரு சதவீத வாக்கு மட்டுமே இருந்தது, இப்போது ஆட்சியில் உள்ளோம். அதனால், 15 சதவீத வாக்குகள் வரை பெற்ற கேரளாவிலும் பாஜக மாற்றத்தை ஏற்படுத்தலாம். நாங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். அனைத்து தரப்பு மக்களும் முன்னேற வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா?












Click it and Unblock the Notifications