3ம் அணிக்கு அடிபோடும் சந்திரசேகர ராவ்.. இன்று பினராயி விஜயனை சந்திக்கிறார்.. பலே திட்டம்!
கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார்.
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியை உருவாக்க இவர் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.
லோக்சபா தேர்தல் முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள்தான் இருக்கிறது. இன்று ஐந்தாம் கட்ட லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இன்னும் இரண்டு கட்ட லோக்சபா தேர்தல் மட்டுமே நடக்க உள்ளது.

இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டுக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. இந்த கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகள் யாருக்கு ஆதரவு தரும் என்பதை பொறுத்தே ஆட்சி அமையும் என்கிறார்கள்.
இதனால் மாயாவதி, மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், பினராயி விஜயன் ஆகியோர் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள். இவர்கள் யார் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கிறார்கள் என்பது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நிலையில்தான் கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியை உருவாக்க இவர் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்தும் இவர்கள் ஆலோசிக்க இருப்பதாக செய்திகள் வருகிறது. ஏற்கனவே தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க, சந்திரசேகர ராவ் முயன்றார்.
அப்போது இவர் உத்தர பிரதேசத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவை சந்தித்தார். அதேபோல் மமதா பானர்ஜி, பிஜு பட்நாயக் ஆகியோரையும் சந்தித்து பேசினார். வரும் மே 21ம் தேதி எதிர்க்கட்சிகள் சில தங்கள் பிரதமரை தேர்வு செய்ய இருக்கிறார்கள.
இந்த நிலையில் அதற்கு முன்பாகவே இவர் கேரள முதல்வரை சந்தித்து பேசுவது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications