அடுத்தடுத்து இரு அரசியல் கொலைகள்... உச்சகட்ட பதற்றத்தில் கேரளா..!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 12 மணி நேரத்தில் இரண்டு அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டதால் அங்கு உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாஜக மற்றும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சேர்ந்த இரண்டு அரசியல் தலைவர்கள் 12 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் பினராயி விஜயன் , இதுபோன்ற கொடூரமான, மனிதாபிமானமற்ற வன்முறைச் செயல்கள் அரசுக்கு ஆபத்தானவை எனவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

எஸ்டிபிஐ நிர்வாகி கொலை
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்த கும்பல் அவரை வழிமறித்து பைக் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்த ஷானை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பாஜக பிரமுகரும் கொலை
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அடுத்த 12 மணி நேரத்திற்குள்ளாக அடையாளம் தெரியாத சிலர் பாஜகவின் ஓபிசி பிரிவு செயலாலராக இருந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவர் வீட்டுக்குள் புகுந்து அவரை வெட்டிக் கொன்றனர். இந்த கொலை சம்பவம் காரணமாக கேரளாவில் உச்சகட்ட பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் போலீசாரின் கொலை சம்பவங்கள் குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

144 தடை உத்தரவு
அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், மாநிலத்தில் மத மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது மேலும் தேவையற்ற கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

பினராயி விஜயன் கண்டனம்
இந்த நிலையில் இதுபோன்ற கொடூரமான மனிதாபிமானமற்ற வன்முறைச் செயல்கள் அரசுக்கு ஆபத்தானவை என்றும் , இதுபோன்ற கொலையாளிகளையும் அவர்களின் வெறுப்பு மனப்பான்மையும் கண்டறிந்து தனிமைப்படுத்த அனைத்து மக்களும் தயாராக இருப்பார்கள் என்றுதான் உறுதியாக நம்புவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும், கொலை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

பரஸ்பரம் குற்றச்சாட்டு
இந்நிலையில் கொலை சம்பவங்களுக்கு பாஜகவும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து பேசிய கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், கடந்த அறுபது நாட்கலில் பாஜக தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட மூன்றாவது கொடூர கொலை சம்பவம் இது என்றும் மாநிலத்தை சீர்குலைக்க பி.எஃப்.ஐ. தொண்டர்கள் முயற்சி செய்கிறார்கள் என கூறியுள்ளார். இதேபோல் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் முரளிதரன், கேரளாவில் குண்டர்கள் ராஜ்ஜியம் என்று குற்றம் சாட்டி உள்ளதோடு மாநிலம் கொலைக் களமாக மாறி வருகிறது என்று முதல்வர் பினராயி விஜயனை டேக் செய்து செய்துள்ளார்.

எச்டிபிஐ நிர்வாகி புகார்
இதே நேரத்தில் பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக எஸ்டிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் எம்.கே.ஃபைசி ட்விட்டரில், மாநிலத்தில் வகுப்புவாத வன்முறையை உருவாக்கி மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பது சங்பரிவார் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும் எனவும், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தைக் கண்டிக்க வேண்டும் எனவும், கேரள காவல்துறையின் அலட்சியப் போக்கு ஆர்.எஸ்.எஸ்-க்கு துப்பாக்கி சூடு போல் செயல்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்திய மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ.யின் தொண்டர்களால் நவம்பர் 15ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்.காரர் எஸ்.சஞ்சித் வெட்டிக் கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாகவே இக்கொலை சம்பவங்கள் அரங்கேறியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications