சட்டை பையில் இருந்த செல்போன்.. திடீரென வெடித்து குபு குபுவென பற்றிய தீ.. கேரளாவில் மீண்டும் திக்
திருவனந்தபுரம்: கேரளாவில் முதியவர் ஒருவர் சட்டை பையில் வைத்திருந்த சாதாரண பட்டன் போன் திடீரென வெடித்து சிதறியது. இதில் அவரது சட்டையிலும் தீ பிடித்தது. உடனடியாக சுதாரித்த முதியவர் சட்டை பையில் பிடித்த தீயை அணைத்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மக்கள் மத்தியில் செல்போன்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து உள்ளது. 24 மணி நேரமும் செல்போனுடனே இருக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உள்ளது. பகல் முழுவதும் பயன்படுத்தி விட்டு சிலர் இரவு நேரத்தில் சார்ஜ் போட்டுக்கொண்டு தூங்குவதையும் காண முடிகிறது.

அதுவும் போததன்று சார்ஜ் ஏற்றிய படி வீடியோக்கள் பார்ப்பது, செல்போனில் பேசுவது, கேம் விளையாடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். செல்போன்களை இப்படி பயன்படுத்துவது ஆபத்தை விளைவிப்பது எனவும் செல்போன் நிறுவனங்கல்ள் எச்சரித்து இருக்கின்றன. ஆனாலும் இதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் பயன்படுத்தும் பழக்கம் பலருக்கும் உள்ளது.
சில நேரங்களில் இப்படி பயன்படுத்தும் போது பேட்டரி சூடாகி வெடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட கேரள மாநிலத்தில் தந்தையின் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்தபோது செல்போன் வெடித்ததில் 8-வயது சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது.
அதேபோல், சென்னை வண்ணாரப்பேட்டையில் செல்போனில் சார்ஜ் செய்து கொண்டே பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதேபோல், கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் ஹரிஸ் ரகுமான் என்பவர் பேண்ட் பாக்கெட்டில் செல்போனை வைத்திருந்த போது திடீரென வெடித்து சிதறியது.
இதில் அவருக்கு தீக்காயங்களும் ஏற்பட்டது. செல்போன்கள் வெடிக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து ஏற்படுவது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கேரளாவில் மீண்டும் ஒரு செல்போன் வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. திரிசூர் மாவட்டத்தில் உள்ள மரோட்டிச்சல் என்ற கிராமத்தில் எலியாஸ் (வயது 70) என்ற முதியவர் அங்குள்ள டீக்கடை ஒன்றில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென அவரது சட்டையின் முன் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சட்டையில் தீ பற்றியது. ஒரு நொடி அதிர்ந்து போன முதியவர் உடனடியாக சுதாரித்துக்கொண்டு சட்டையில் பற்றிய தீயை அணைத்தார். இதனால் அதிர்ஷ்டவசாமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. எலியாஸ் வைத்து இருந்தது ஆயிரம் மதிப்பு கொண்ட சாதாரண பட்டன் போன் என்று சொல்லப்படுகிறது.
பேட்டரி சூடாவது போல் உணர்ந்ததாகவும் அதற்கு அடுத்த நொடியே வெடித்து தீ பிடித்தததாகவும் எலியாஸ் தெரிவித்துள்ளர். செல்போன் பேட்டரி வெடித்து தீ பிடித்த காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications