ரிசர்வ் பேங்க் வெளியிடாத 1 ரூபாய் நோட்டு! இதில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?
கேரளா: இந்தியா சுதந்திரம் அடைந்தபோது முதன்முதலாக வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டைக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாதுகாத்து வருகிறார். இந்த ரூபாய் நோட்டை ரிசர்வ் பேங்க் அச்சடித்து வெளியிடவில்லை என்பதால் இது மற்ற நாணயங்களைவிடச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அது ஏன் தெரியுமா?
இன்றைக்கு வளரும் இளைஞர்கள் கைகளில் பணத்தையோ, நாணயத்தையோ தொட்டுப் புழங்காத ஒரு தலைமுறையாக மாறிக் கொண்டுவருகின்றனர். ஒரு ரூபாய் கூகுள் பே செய்பவர்கள் காலங்கடந்து இவர்கள் காலத்தில் ஒரு ரூபாய் நாணயம் எப்படி இருந்தது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதன் வடிவம் எப்படி இருந்தது? அதில் ரிசர்வ் பேங்க் ஆளுநராக இருந்த யார் கையெழுத்துப் போட்டிருந்தார்? அவர் பெயர் என்ன? என்பன போன்ற எந்த விவரங்களும் தெரியப் போவதில்லை.

ஏனென்றால், அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனைதான். அப்படி என்றால் தங்களின் காலத்தில் 10 ரூபாய் எப்படி இருந்தது? 100 ரூபாய் எப்படி இருந்தது என்பதைக் கண்களால் பார்க்காத ஒரு தலைமுறை கட்டாயம் வரலாற்றில் வர இருக்கிறார்கள். அதை யாருமே மறுக்க முடியாது. காலப்போக்கில் பணம் என்பது வெறும் டிஜிட்டல் வடிவத்தில் மட்டுமே வரக் கூடிய ஒன்றாக மாறலாம். பணம் அச்சிடுவதைக் கூட அரசாங்கம் நிறுத்திவிடலாம். அந்த வேகத்தில் தான் உலக நாடுகள் முன்னேறிச் சென்று கொண்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் கலைஞர் 100 ரூபாய் நாணயம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இந்தியா சுதந்திரம் அடைந்து முதன்முதலாக வெளியிட்ட முதல் ரூபாய் நோட்டை இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்துள்ளார். யார் இவர்?
கேரள மாநிலம் ஆலப்புழாவில் வசித்து வரும் அரவிந்த் குமார் பை தான் அவர். சுதந்திர இந்தியாவின் முதல் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதியுடன் 75ஆவது ஆண்டு நிறைவடைந்துள்ளது. 1949 ஆம் ஆண்டு இந்திய அரசின் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட முதல் ஒரு ரூபாய் நோட்டில், சுதந்திர இந்தியாவின் முதல் நிதிச் செயலாளராக இருந்த மலையாளியான கேஆர்கே மேனனின் கையொப்பம் உள்ளது. இவரைப் பொறுத்தவரை இது வெறும் 75 வருடப் பழமையான நோட்டு மட்டும் இல்லை. தனது மாநிலத்தைச் சேர்ந்த முதல் நிதிச் செயலாளர் கையொப்பம் போட்ட பணம் என்பது அதைவிட முக்கியம்.
இந்த 75 வருடப் பழமையான நோட்டை கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், சேர்தலாவில் உள்ள குட்டிக்கட்டுகாவலைச் சேர்ந்த அரவிந்த் குமார் பை என்பவர் இன்றுவரை அதற்காகவே பாதுகாத்து வருகிறார். இவர் ஒரு ஆசிரியர். கூடவே பழைய நாணயங்களைத் தேடித் தேடிச் சேகரிப்பதில் ஆர்வமுள்ளவர். இவரிடம் மொத்தம் 1,03,000 ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளார். அதிக அளவில் பழைய நாணயங்களைச் சேர்த்துக் குவித்து வைத்துள்ளதற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இவர் இடம் பிடித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர்தான் வழக்கமாகப் பணத்தில் கையெழுத்து இடுவது வழக்கம். ஆனால், இவர் வைத்துள்ள பணத்தில் நிதிச் செயலாளரால் கையொப்பமிட்டுள்ளார். ஆகவே இந்தப் பணம் மற்ற நாணயங்களைவிடச் சிறப்பு அந்தஸ்தைப் பெறுகிறது. இந்த ஒரு ரூபாய் நோட்டு இன்றுள்ள வேறு எந்த நோட்டுகளைவிட முற்றிலும் வேறுபடுகிறது.
இந்த ஒரு ரூபாய் நோட்டு நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டாலும், அதிக மதிப்புள்ள நோட்டுகளை வெளியிடுவதற்கு ரிசர்வ் வங்கிதான் பொறுப்பேற்றுள்ளது. இந்த ஒரு ரூபாய் நோட்டின் மற்றொரு தனிச்சிறப்பு என்னவென்றால், மற்ற நாணயங்களில் காணப்படுவது போல், 'இந்திய ரிசர்வ் வங்கி' என்பதற்குப் பதிலாக 'இந்திய அரசு' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
-
பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம் -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications