சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு குட்நியூஸ்.. திருவிதாங்கூர் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருவனந்தபுரம்: ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான விடுதிகளில அறைகள் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டிருக்கிறது.. முன்பதிவு செய்யும் பக்தர்கள் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை தங்க அனுமதிக்கப்படுவார்கள். 12 மணி நேரம் தங்கும் அறைகளுக்கு ரூ.250 முதல் ரூ.1,600 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 15 நாட்களுக்கு முன்பு வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை உலக அளவில் புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலாகும். மஹிஷி என்ற பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என்று மக்களால் அழைக்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் ஒரு மலையின் உச்சியில் , கடல் மட்டத்தில் இருந்து 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. ஆண்டு தோறும் சுமார் 5 கோடி மக்கள் மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

சபரிமலைக்கு கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கி பல பக்தர்கள் சென்று வருகிறார்கள். புல்மேடு, எரிமேலி பெருவழிப்பாதை,நிலக்கல் பம்பை பா என மூன்று வழிகளில் பக்தர்கள் சபரிமலையை அடைந்து வருகிறார்கள். இதில் புல்மேடு பாதை அடர்ந்த காட்டுப்பாதை என்றாலும், அந்த பாதையில் இறங்குவது மிகவும் எளிது என்கிறார்கள். அதேநேரம் மிகவும் பாதுகாப்பான பாதை என்றால் பம்பை நதி வழியாக சபரிமலை பாதை தான். இது மிகவும் கடினமான பாதை என்றாலும் பாரம்பரிய பாதை ஆகும்.
இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் 'சுவாமி சாட்பாட்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் சந்தேகங்களுக்கு பக்தர்கள் தீர்வு பெற முடியும். இந்த செயலி மூலம் சபரிமலை கோவில் நடை திறப்பு, அடைப்பு, சிறப்பு பூஜை விவரம், அருகில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், போலீஸ பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய முழு விவரங்களையும் பக்தர்கள் அறிந்து கொள்ளலாம்.
அதேபோல் சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக தங்கும் விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "சபரிமலையில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக சபரி, பிரணவம் உள்பட 12 தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் 540 அறைகள் உள்ளன. சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் ஆன்லைன் மூலமாக (onlinetdb.com) அல்லது நேரிலும் தங்கும் அறைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் பக்தர்கள் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை தங்க அனுமதிக்கப்படுவார்கள். 12 மணி நேரம் தங்கும் அறைகளுக்கு ரூ.250 முதல் ரூ.1,600 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 15 நாட்களுக்கு முன்பு வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications