100 கி.மீ. தூரம் நடந்த ராகுல் காந்தி.. ஷூ போட்டும் கால்களில் கொப்புளம்.. நாளை நோ யாத்திரை.. ரெஸ்ட்!
திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டதால் அவரது கால்களில் கொப்புளம் ஏற்பட்டுள்ளதால் நாளை அவர் தனது பயணத்திற்கு ஓய்வு அளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியை இழந்துவிட்டது. அது போல் பெரும்பாலான மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துவிட்டது. ஒரு சில மாநிலங்களிலும் கூட கூட்டணி ஆட்சியில்தான் அங்கம் வகிக்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே கட்சியை வலுப்படுத்த வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்கள். இதனால் கட்சியை பலப்படுத்தவும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.

காந்தி மண்டபம்
குமரியின் காந்தி மண்டபத்திலிருந்து கடந்த 7ஆம் அவர் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி வழங்கி தொடங்கி வைத்தார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறும் இந்த நடைப்பயணம் காஷ்மீரில நிறைவு பெறும்.

ராகுலின் நடைபயணம்
தமிழகத்தில் ராகுலின் நடைபயணம் 4 நாட்கள் நடந்தது, கடந்த 11 ஆம் தேதி முதல் கேரள மாநிலததில் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் திருவனந்தபுரம், கணியாபுரத்தில் இருந்து யாத்திரையை தொடங்கினார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அவர் கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் நடந்து சென்றார்.

உதவியாளர்கள்
அவருக்கு உதவியாளர்கள் குடை பிடிக்க சென்ற போது கூட வேண்டாம் என தடுத்துவிட்டார். நடைபயணத்தின் போது ஆங்காங்கே ராகுல் காந்தியும் அவருடன் செல்வோரும் ஓய்வு எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று 8ஆவது நாள் யாத்திரை நடந்து வருகிறது.

ஆலோசனை கூட்டம்
கடந்த 8 நாடகளாக ராகுல் காந்தி நடந்து வருவதால் அவரது கால்களல் கொப்புளங்கள ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக ட்விட்டரல் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, காலில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் எனது ஒற்றுமை பயணம் தொடரும். இந்த நிலையில் ராகுலின் பாதயாத்திரையை ஒருங்கிணைக்கும் குழுவினர் ராகுல் காந்தி நாளை ஓய்வெடுக்க உள்ளதாக கூறியுள்ளார். நாளை ஓய்வு எடுத்தாலும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications