ஆற்றுக்கு வழி காட்டிய "கூகுள் மேப்" இரவில் திடீரென வந்த அலறல் சத்தம்.. கேரளாவில் 2 பேர் பலியான சோகம்
திருவனந்தபுரம்: கூகுள் மேப்சை நம்பி காரில் சென்று கொண்டிருந்தவர் 2 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவுக்கு டூர் வந்த ஆண் - பெண் இருவரும் கூகுள் மேப்சை நம்பி சென்றுள்ளனர். ஆற்றுப்பாதையில் கூகுள் மேப்ஸ் வழி காட்டியதில் அதனை நம்பி சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருவரும் உயிரிழந்திருக்கின்றனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் குமரகோம் அருகே உள்ள கைப்புழமுட்டுவில் ஆற்று நீரில் கார் அடித்து செல்லப்பட்டது. இதில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் பலியனார்கள். கூகுள் மேப்ஸ் பார்த்து காரை ஓட்டியதால் இந்த விபரீத விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: -

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சாயேலி ராஜேந்திர சர்ஜே என்ற பெண்ணும் ஜேம்ஸ் ஜார் (வயது 48) என்பவரும் குமரகோம் பகுதியில் உள்ள படகு விடுதியில் சுற்றுலா சென்று விட்டு காரில் கோட்டயம் திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர். கோட்டயம் செல்வதற்கு வழி தெரியாததால், கூகுள் மேப்ஸ் போட்டுக்கொண்டு காரை ஒட்டியதாக தெரிகிறது. இவர்கள் வந்த கார் கைப்புழமூட்டு அருகே வந்த போது அங்குள்ள ஆற்றுப்பாலம் வழியாக கூகுள் வழிகாட்டியுள்ளது.
இரவு நேரம் ஆகிவிட்டதால் கூகுள் மேப்சை மட்டுமே நம்பி காரை ஆற்றுப்பாலத்தில் டிரைவர் விட்டுள்ளார். ஆனால் ஆற்றுப்பாலம் முழுவதும் தண்ணீர் மூழ்கியபடி சென்றுள்ளது. இந்த ஆற்று நீரில் கார் மூழ்கி அடித்து செல்லப்பட்டது. காரில் பயணம் செய்த இருவரும் உயிரைக் காப்பாற்றுங்கள் என கூக்குரல் இட்டுள்ளார்கள். இரவில் திடீரென சத்தம் கேட்கிறதே என கவனித்த அப்பகுதி மக்கள், சத்தம் கேட்ட இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அப்போதுதான் கார் ஆற்று நீரில் மூழ்கி கிடப்பதை கண்டனர். உடனடியாக தீ அணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உயிருக்கு போராடிய இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால், இருவருமே சடலமாகவே மீட்கப்பட்டனர். இதற்கிடையே, அங்கு வந்த தீ அணைப்பு படையினர், ஆற்றில் இருந்து காரை மீட்டனர்.
காரில் இருந்த லக்கேஜ்களை ஆய்வு செய்ததில் டூருக்காக குமரகோம் வந்துவிட்டு கோட்டயத்திற்கு திரும்பியது கண்டறியப்பட்டுள்ளது. கோட்டயத்தில் வாடைக்கு காரை எடுத்துக்கொண்டு காரில் குமரகோம் வந்ததும் அங்கிருந்து திரும்பி செல்லும் போது விபத்தில் சிக்கியதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. கொட்டி தீர்த்து வரும் கனமழையால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.
ஆறுகளிலும் ஓடைகளிலும் நீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. ஆறுகளில் திடீரென ஏற்படும் வெள்ளத்தால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், கூகுள் மேப்ஸ்சை பார்த்து ஓட்டிச்சென்றால், ஆற்றுப்பாலங்கள் நீரில் மூழ்கியிருப்பது சில நேரங்களில் அப்டேட் ஆகாமல் இருக்கும்.
இது வெளியூர் வாசிகளுக்கு தெரியாது என்பதால் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள். கேரளா போன்ற பகுதிகளில் பயணிக்கும் போது கூகுள் மேப்சை மட்டுமே நம்பி பயணிப்பது ஆபத்து நிறைந்தது, உள்ளூர் வாசிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டுதான் செல்ல வேண்டும் என்பதை காட்டும் வகையில் தற்போதைய விபத்து நடைபெற்றுள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications