சபரிமலை: அதிகாலையில் நுழைந்த 2 பெண்கள்.. போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம்!
சபரிமலை கோவிலுக்குள் 50 வயதிற்கும் குறைவான இரண்டு பெண்கள் இன்று அதிகாலை நுழைந்து தரிசனம் செய்ததாக தகவல்கள் வருகிறது.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் 50 வயதிற்கும் குறைவான இரண்டு பெண்கள் இன்று அதிகாலை நுழைந்து தரிசனம் செய்தனர். இதனால் சபரிமலையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட வலதுசாரியினர் கேரளாவில் பெரிய போராட்டத்தில் குதித்தனர். சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக கடுமையாக போராடினார்கள். இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

இதுவரை
இந்த தீர்ப்பிற்கு பின் பல முறை தரிசனத்திற்காக கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதுவரை 50 வயதிற்கும் குறைவான ஒரு பெண் கூட கோவிலுக்கு நுழைய முடியவில்லை. கடும் போராட்டம் காரணமாக யாரும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை.

அதிகாலை சென்றனர்
இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்குள் 50 வயதிற்கும் குறைவான இரண்டு பெண்கள் இன்று அதிகாலை நுழைந்து தரிசனம் செய்தனர். மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா என்ற 46 வயது பெண்ணும், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து என்ற 40 வயது பெண்ணும் இன்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

தரிசனம் செய்தனர்?
இவர்கள் காலை 3.45 மணிக்கு கோவிலுக்குள் சென்றுள்ளனர். அப்போது அங்கு போராட்டக்காரகள் யாருமில்லை என்று கூறப்படுகிறது. போலீஸ் பாதுகாப்புடன் உள்ளே சென்ற இவர்கள் அங்கு தரிசனம் செய்தனர். ஆனால் இதுகுறித்து கேரள அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.
|
வீடியோ வெளியானது
இதுகுறித்து முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தற்போது வீடியோக்களும் வெளியாகி உள்ளது. பெண்கள் கோவிலுக்குள் சென்ற பிரகாரத்தில் சுற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications