திருவனந்தபுரத்தில் அவசர அவசரமாக தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம்.. என்ன காரணம்?
திருவனந்தபுரம்: பிரிட்டனுக்கு சொந்தமான எப் 35 பி லைட்னிங் II போர் விமானம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நேற்று அவசரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதி நவீன திறன் கொண்ட 5 ஆம் தலைமுறை போர் விமானம் ஆகும். சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்து இருக்க கூடிய சூழலில் பிரிட்டனுக்கு சொந்தமான போர் விமானம் நேற்று இரவில் திடீரென அவசரமாக தரையிறங்கியது திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரிட்டனுக்கு சொந்தமான எப் 35 பி லைட்னிங் II போர் விமானம் நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்திய பெருங்கடலில் விமானம் பறந்து கொண்டிருந்த போது எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கியது
அதி நவீன திறன் கொண்ட 5-ஆம் தலைமுறை போர் விமானமான இந்த எப் 35 பி, இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமானது ஆகும். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இயக்கப்பட்டு வந்த வந்த அந்த போர்க்கப்பல் சமீபத்தில்தான், இந்திய கடற்படையுடனான கூட்டு பயிற்சியை முடித்து இருந்தது.
பிரிட்டனுக்கு சொந்தமான போர் விமானம் கேரளாவில் தரையிறங்கியிருப்பது வழக்கத்திற்கு மாறானது என்று தெரிவித்த பாதுகாப்பு நிபுணர்கள், எனினும், இதற்கு முன்பாக கடந்த காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று இருப்பதாக தெரிவித்தனர். இந்த எப் 35 பி விமானம் என்பது, குறுகிய தொலைவில் டேக் ஆப் மற்றும் செங்குத்தாக தரையிறங்கும் திறன் கொண்டது.
எரிபொருள் குறைந்து இருப்பதாக
பிரிட்டனுக்கு சொந்தமான HMS போர்க்கப்பலில் ஏன் அந்த விமானம் தரையிறங்கவில்லை என்பது குறித்து தெளிவான விவரம் இல்லை. அதேநேரத்தில் மோசமான வானிலை காரணமாக பாதுகாப்பாக அந்த போர்க்கப்பலில் தரையிறக்க முடியாது என்பதால் விமானம், திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் தரையிறங்கி இருக்கலாம் என்று தெரிகிறது.
தற்போது அந்த விமானத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எரிபொருள் நிரப்பும் அனுமதி கிடைத்தவுடன், அது மீண்டும் புறப்படும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமான நிலைய அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், "விமானி எரிபொருள் குறைவாக இருப்பதாகக் கூறி தரையிறங்க அனுமதி கேட்டார்.
பல்துறை போர் விமானங்களில் ஒன்று
இதையடுத்து, தொழில் நுட்ப ரீதியாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன" என்றார் சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்து இருக்க கூடிய சூழலில் பிரிட்டனுக்கு சொந்தமான போர் விமானம் நேற்று இரவில் திடீரென அவசரமாக தரையிறங்கியது திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரரான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எஃப்-35 போர் விமானம், தற்போது பயன்பாட்டில் உள்ள மிகவும் மேம்பட்ட பல்துறை போர் விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விமானத்தின் மறைந்து தாக்கும் திறன், மின்னணு போர் அமைப்புகள் மற்றும் தரவு பகிர்வு உள்கட்டமைப்பு ஆகியவை அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் நேட்டோ படைகளின் வியூகத்திற்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது பற்றி இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. தற்போது வரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில்தான் அந்த விமானம் நின்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications