கேரளாவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் ஆய்வு
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று அம்மாநிலத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் இந்தியாவில்தான் அதிகபட்சமான ஒருநாள் பாதிப்பு இருந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 33,221 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் 421 பேர் கொரோனாவால் நேற்று உயிரிழந்தனர்.

பாதிப்பு அதிகம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில்தான் அதிகமாக உள்ளது. கேரளாவில் 18,582 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 102 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் 4,797 பேருக்கு பாதிப்பு உறுதியானது; இம்மாநிலத்தில் 130 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

பிற மாநில நிலவரம்
தமிழகத்தில் 1896; கர்நாடகாவில் 1431; ஆந்திராவில் 1506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் தொடருகிறது. மணிப்பூரில் நேற்று 602 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கேரளாவில் மத்திய அமைச்சர்
இதனிடையே கேரளா, அஸ்ஸாம் மாநிலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்து வருகிறார். இதன் முதல் கட்டமாக இன்று காலை கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு அவர் வந்தடைந்தார். நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 50% கேரளாவில்தான் பதிவாகி இருக்கிறது. மேலும் கேரளா முதல்வர் பினராயி விஜயனையும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
Recommended Video

அஸ்ஸாமில் நாளை ஆய்வு
கேரளா பயணத்தை முடித்துக் கொண்டு நாளை அஸ்ஸாம் செல்கிறார் மன்சுக் மாண்டவியா. அஸ்ஸாம், மேகாலயா மணிப்பூர், மிசோரம் என வடகிழக்கு மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக நாளை மன்சுக் மாண்டவியா ஆராய உள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications