ஓயாத அலைகள்.. கேரளா ஆளுநரை வெளுத்தெடுத்த முதல்வர் பினராயி விஜயன்! முட்டாள் போல பேசுவதாக சாடல்!
திருவனந்தபுரம்: பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் எதிர்க்கட்சிகளின் மாநில அரசுகளுக்கும் இடையேயான மோதல் தொடர் கதையாகி வருகிறது. இம்முறை கேரளாவில் ஆளுநர் ஆரிப்கானை வெளுவெளுவென வெளுத்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன்.

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையேயான முரண்பாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகசட்டசபை நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதில் முன்னணி பாத்திரம் வகிப்பவர் ஆளுநர் ரவி.
தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் கேசிஆருக்கும் இடையே பகிரங்க மோதல் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரை இல்லாமல் சட்டசபை கூட்டத்தை நடத்திய பெருமைக்குரியவராக மாறிவிட்டார் கேசிஆர். தெலுங்கானா அரசுக்கும் தமக்கும் இடையேயான மோதலை குமுறல் போல அண்மையில் தமிழிசை கொட்டி இருந்தார். இதனை திமுகவின் முரசொலி கிண்டலடித்துவிட்டது. புதுச்சேரியில் பாஜக கூட்டணி அரசுதான்.. ஆனாலும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் மல்லுக்கட்டுதான்.
இதேநிலைமைதான் இடதுசாரிகள் ஆளும் கேரளாவிலும்.. இம்மாநிலத்தின் ஆளுநர் அதிகாரங்களை எப்படி எல்லாம் குறைக்க வழி இருக்கிறதோ அத்தனையையும் கையில் எடுத்தார் முதல்வர் பினராயி விஜயன். ஆனால் அசராத் ஆளுநர் ஆரிப்கான், பக்கா புடம் போட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை நிரூபிக்கும் வகையில் அரசியல் அதிரடி காட்டி வருகிறார்.
இந்நிலையில் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆரிப்கான் ஆலோசனை நடத்தியது பெரும் சர்ச்சையானது. இப்போது ஆளுநர் ஆரிப்கானை கடுமையான வசைபாடி இருக்கிறார் பினராயி விஜயன். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமன உரிமையை மாநில அரசுக்கு தர முடியாது என்பது ஆரிப்கான் கருத்து. இது தொடர்பாக பினராயி கூறுகையில், மாநிலத்தின் ஆளுநர் ஆரிப்கான் பேசுவது முட்டாள்தனமாக உள்ளது. அவர் வகிக்கும் அரசியல் சாசனப் பதவிக்கு சில பொறுப்பு உண்டு. பல விஷயங்களை முந்திக் கொண்டு ஊடகங்களில் சொல்லிவிடுகிறார் ஆளுநர். அவருக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் சொல்லும் திறமை இருக்கிறது என நினைக்கிறாரா? இந்தப் போக்கு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதை ஆரிப்கானுகு நினைவூட்ட வேண்டும் என்றார். இதனால் கேரளா அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications