தெர்மல் ஸ்கேனர் முயற்சி தோல்வி! 220 பேரின் நிலை என்ன? வயநாடு நிலச்சரிவில் 344யை தொட்ட பலி.. சோகம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 344யை தொட்டுள்ளது. மேலும் 220 பேர் மிஸ்ஸான நிலையில் அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி மண்ணில் புதைந்திருப்பவர்களை கண்டுபிடிக்கும் தெர்மல் ஸ்கேனர் சோதனையிலும் யாரும் கண்டுபிடிக்கப்படாததால் நேற்று அந்த பணி நிறுத்தப்பட்டது.

கேரளாவின் சிறந்த சுற்றுலாதலமாக விளங்கும் மாவட்டங்களில் ஒன்று வயநாடு. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 30ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் மலைப்பிரதேசமான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.

Wayanad Landslide

இதில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கனமழை பெய்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள், மண் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்து வரப்பட்டன. மலைகளில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு என்பது முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி கிராமங்களை மொத்தமாக அழித்தது.

பொதுமக்கள், வீடுகள் சாலியார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். நள்ளிரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் தூங்கிய நிலையிலேயே மண்சரிவிலும், வெள்ளத்திலும் சிக்கினர். மொத்தம் 1000க்கும் அதிகமானவர்கள் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஏராளமானவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை என்பது 300யை கடந்து செல்கிறது.

நேற்று 4வது நாள் மீட்பு பணி நடந்து முடிந்தது. மொத்தம் 344 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் 220 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. இவர்களை கண்டுப்பிடிக்க இன்று 5வது நாளாக மீட்பு பணி தொடங்கி நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் மீட்பு பணியில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது மீட்பு பணி என்பது அங்கு பெரும் சவாலாக உள்ளது.

4 நாட்களாக மீட்பு பணி நடந்தும் கூட இன்னும் 220 பேர் வரை மாயமாகி உள்ளனர். இதனால் இவர்களை கண்டுப்பிடிக்க நேற்று ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு வரப்பட்டது. இந்த கருவி என்பது மனிதர்களின் வெப்பநிலையின் அடிப்படையில் செயல்படும். பயங்கரவாதிகள் வீடுகளில் பதுங்கி இருப்பதை இந்த கருவி மூலம் ராணுவத்தினர் கண்டுப்பிடிக்க பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் நேற்று முண்டக்கை பகுதியில் தெர்மல் ஸ்கேனர் மூலம் மீட்பு பணி தொடங்கப்பட்டது. 3 இடங்களில் தெர்மல் ஸ்கேனர் அலர்ட் கொடுத்தது. அந்த இடங்களில் சுமார் 3 அடி ஆழம் வரை தோண்டிப்பார்த்தாலும் உயிருடன் அல்லது இறந்த நிலையில் யாரும் இல்லை. இதனால் நேற்று இரவு 9.30 மணியளவில் தெர்மல் ஸ்கேனர் மூலம் நடக்கும் மீட்பு பணி கைவிடப்பட்டது. இதனால் மீதமுள்ள 220 பேரை மீட்பு குழுவினர் எப்படி கண்டுபிடிக்க போகின்றனர்? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+