தோண்ட தோண்ட பிணங்கள்.. 300யை கடந்த கேரளா நிலச்சரிவு பலி.. 4வது நாளாக தொடங்கிய மீட்பு பணி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தோண்ட தோண்ட உடல்கள் கிடைத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பலி எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. தற்போது வரை மொத்தம் 316 பேர் பலியாகி உள்ள நிலையில் 200க்கும் அதிகமானவர்களை தேடும் பணி 4வது நாளாக தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
கேரளா இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாகும். தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆறு, அணைகளில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த 30ம் தேதி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

அப்போது 30ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு என்பது ஏற்பட்டது. இதில் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
மலைகளில் இருந்து வந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்டவற்றால் கிராமங்கள் அடித்து செல்லப்பட்டன. இரவு நேரம் என்பதால் மக்கள் தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானவர்கள் வீடுகளுடன் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டனர். இதுபற்றி அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இன்று காலை 8.30 நிலவரப்படி பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 300யை கடந்துள்ளது. அதாவது மொத்தம் 316 பேரின் உடல்கள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலியார் ஆற்றில் இருந்து மட்டும் 172 பேரின் உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் தோண்ட தோண்ட பிணங்கள் வருகின்றன. இதுதவிர இதனால் பலி எண்ணிக்கை என்பது இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏனென்றால் தற்போது வரை சுமார் 300க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர இன்னும் 200க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டு இன்றோடு 4வது நாள் ஆகிறது. இதனால் மண், சகதிக்குள் சிக்கி இருப்பவர்கள் உயிர் பிழைத்து இருப்பது கஷ்டம் என கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. அதேவேளையில் வனப்பகுதியில் சிக்கி இருப்பவர்களை பத்திரமாக மீட்க முடியும். மேலும் தற்போது மீட்பு பணி நடக்கும் இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் மீட்பு பணியை சவாலாக்கி வருகிறது.
இருப்பினும் மீட்பு குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இன்று 4வது நாளாக மீட்பு பணி என்பது தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக நேற்றைய தினம் வயநாடு முன்னாள் எம்பி ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தனது தந்தையை இழந்தபோது ஏற்பட்ட வலியை தற்போது உணர்வதாக ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications