அபுதாபியில் இருந்து கேரளா வந்த இளைஞர்.. பரிசோதனையில் உறுதியான குரங்கம்மை
திருவனந்தபுரம்: அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய வயநாட்டை சேர்ந்த இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்ட்டுள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கேரளாவில் இருந்து அதிகமானவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அரபு நாடுகளில் அதிகமாக கேரளா மக்கள் பணி செய்து வருகின்றனர்.

கேரளா மாநிலம் வயநாட்டை சேர்ந்தவர் 26 வயது இளைஞர். இவர் அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தனிமையில் உள்ள அவருக்கு சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த குரங்கம்மை என்பது பொதுவாக வெப்பமண்டல மழைக்காடுகள் நிறைந்த மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் தான் இருந்தது. தற்போது பிற பகுதிகளிலும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. காய்ச்சல், உடல் அரிப்பு, நிணநீர் மூட்டுகளில் வீக்கம் உள்ளிட்டவை குரங்கம்மைக்கான அறிகுறிகளாக உள்ளன.
ஆப்பிரிக்கா நாடுகளை ஆட்டம் காண செய்த குரங்கம்மை தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்த தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் 116 நாடுகளில் குரங்கம்மை நோய் பரவியது. சமீபத்தில் குரங்கம்மை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் கூட ஆங்காங்கே சில பாதிப்புகள் உள்ளது.
நம் நாட்டை பொறுத்தவரை குரங்கம்மை நோய் பரவி விடாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த குரங்கம்மை 1958ம் ஆண்டில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது, குரங்கம்மை நோய்.
உலக நாடுகளில் பலருக்கும் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.
விலங்குகளுடன் நேரடியாக தொடர்பு வைத்திருக்கும்போது ரத்தம் மற்றும் நம் உடலில் உள்ள நுளைகள் வழியாக அந்த வைரஸ் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த குரங்கம்மை மனிதர்களிடம் இருந்து இன்னொருவருக்கும் பரவும். அதாவது குரங்கம்மை பாதிக்கப்பட்டவரின் எச்சில், வியர்வை உள்ளிட்டவை இன்னொருவரின் மீது படும்போது அவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications