இந்திரா காந்தி 2.0: வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தியை ஆதரித்து மமதா பிரசாரம்!
திருவனந்தபுரம்: வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை ஆதரித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் உ.பி.யின் ரேபரேலி, கேரளாவின் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதனையடுத்து உ.பி. ரேபரேலி தொகுதி எம்பி பதவியைத் தக்க வைத்துக் கொண்டு வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி.

இதனால் வயநாடு லோக்சபா தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர்,ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களுடன் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறக் கூடும். இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் பிரசாரங்களை மட்டுமே மேற்கொண்டு வந்தார் பிரியங்கா. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் தேர்தல் அரசியலில் களமிறங்காமல் இருந்தார் பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் தேர்தல் அரசியலிலும் பிரியங்கா காந்தி கால் பதித்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் தேர்தல் அரசியலை அவரது பாட்டியும் இந்தியாவின் இரும்பு பெண்மணி என போற்றப்படுகிற இந்திரா காந்தி அம்மையாருடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தியை ஆதரித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி பிரசாரம் செய்வார் என்கின்றன தகவல்கள். இந்திரா காந்தி அம்மையாரின் செல்லப்பிள்ளையாக அரசியலில் இறங்கியவர் மமதா பானர்ஜி. பின்னர் காங்கிரஸில் இருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக நிலைநிறுத்திய மமதா, இந்திராவின் பேத்திக்காக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார் என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications