சபரிமலை போராட்டங்கள் அனைத்தும் தோற்றுவிட்டது.. கேரள பாஜக ஒப்புதல்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக நடத்திய போராட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டதாக கேரள பாஜக தெரிவித்து இருக்கிறது.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக நடத்திய போராட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டதாக கேரள பாஜக தெரிவித்து இருக்கிறது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் கடந்த சில வாரங்களாக போராடி வந்தது. இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்குள் கடந்த 2ம் தேதி நுழைந்த இரண்டு அங்கு சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
இவர்கள் இருவரும் 50 வயதிற்கும் குறைவான பெண்கள் ஆவர். இந்த நிலையில் இதே போல் 50க்கும் அதிகமான பெண்கள் நுழைந்துள்ளதாக கேரளா அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது. தற்போது இதுகுறித்து கேரள பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை பேட்டியளித்துள்ளார்.

உண்ணாவிரத போராட்டம்
சபரிமலை பிரச்சனை தொடர்பாக பாஜகவினர் சிலர் நீண்ட நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டம் அனைத்து வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது. சபரிமலை தொடர்பான அனைத்து உண்ணாவிரத போராட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக கேரள பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.

பாஜக தோல்வி
இந்த போராட்டம் தொடர்பாக கேரள பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை அளித்துள்ள பேட்டியில், நாங்கள் நினைத்தது போல இந்த போராட்டம் செல்லவில்லை. எங்களுக்கு இதன் மூலம் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. சபரிமலை தொடர்பான பாஜக போராட்டங்கள் தோல்வி அடைந்துவிட்டது.

ஐயப்பனின் அருள்
ஆனால் மக்களின் ஆதரவு எங்களுக்கு கிடைத்துள்ளது. முன்பைவிட கேரளாவில் பாஜகவிற்கு ஆதரவு அதிகம் ஆகியுள்ளது. எங்களுக்கு ஐயப்பனின் அருள் கிடைத்து இருக்கிறது. அதுவே பெரிய பாக்கியம்.

வழக்குகள்
பாஜகவினர் மீது கேரள அரசு போட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இதுவரை 5000 ஜோடிக்கப்பட்ட வழக்குகள் சபரிமலை போராட்டக்காரர்கள் இது போடப்பட்டுள்ளது. 1000 பேர் வரை இதனால் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேரள பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications