காதலன் பலியான அன்று இரவே.. வேகமாக செயல்பட்ட "பாய்சன்" காதலி கிரீஷ்மா.. என்ன செய்தார் தெரியுமா? ஷாக்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஹாரோன் என்ற இளைஞரை கிரீஷ்மா என்ற பெண் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கிரீஷ்மாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா எல்லையில் களியக்காவிளை தாண்டி பாறசாலை பகுதியில் வசித்து வந்தார் ஷாரோன் ராஜ். இவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கிரீஷ்மா அவருக்கு கஷாயத்தில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.
ஜாதகப்படி முதல் கணவன் இறந்துவிடுவார் என்பதால் ஷாரோனை கொன்றுவிட்டு பணக்கார இளைஞர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று கிரீஷ்மா இந்த கொலையை செய்துள்ளார்.

கொலை
இந்த நிலையில் ஷாரோன் பலியான மறுநாள் என்ன செய்தேன் என்று கிரீஷ்மா போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன்படி ஷாரோன் மரணம் அடைய வேண்டும் என காத்து இருந்தேன். அவர் கடைசி நாட்களில் உடல்நிலை மோசமானதுமே மரணத்திற்காக காத்து இருந்தேன். அவர் இறந்துவிட்டால் என் மீது சந்தேகம் வர கூடாது என்று வீட்டில் இருந்த தடயங்களை அழித்தேன் என்று கூறி உள்ளார். அதன்படி விஷம் கொடுக்க பயன்படுத்தப்பட்ட கஷாய சட்டியை ஷாரோன் மரணம் அடைந்ததும் அப்புறப்படுத்தினேன்.

போலீஸ்
போலீஸ் வீட்டில் விசாரிக்க வரும் போது அதற்கான தடயங்கள் இருக்காத மாதிரி பார்த்துக்கொண்டேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். 25ம் தேதி ஷரோன் பலியான அன்று இரவே பின்னால் இருந்த குளத்தில் சட்டியை தூக்கி வீசி உள்ளனர். ஆனால் கடைசியில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அந்த சட்டியையும் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. இன்று கிரீஷ்மா திற்பரப்பு அருவி இருக்கும் இடத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர் . அங்கு இவர்கள் காதலர்களாக இருந்த போது சென்று உள்ளனர். இதன் காரணமாக அங்கும் கிரீஷ்மனை போலீசார் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அங்கும் கொலைக்கு திட்டம் எதுவும் போடப்பட்டதா என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை
இன்று நடந்த விசாரணையில் வேறு சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்களும் போலீஸாருக்கு கிடைத்து உள்ளது. அதன்படி.. கிரீஷ்மா ஷாரோனை உடனடியாக கொலை செய்யாமல், கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். ஒரேயடியாக கொலை செய்தால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்பது கிரீஷ்மாவிற்கு தெரிந்து உள்ளது. இதற்காக ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்யலாம் அதை பற்றி ரிசர்ச் செய்துள்ளார்.

கூகுள்
கூகுளில் ஒருமுறை, இரண்டு முறை அல்ல பல முறை இதை பற்றி கிரீஷ்மா தேடி உள்ளார். அதன்படி ஸ்லோவாக கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரை எப்படி கொலை செய்வது என்று அவர் தேடி இருக்கிறார். இதில்தான் வலிநிவாரண மாத்திரைகள், ஆண்டிபயாடிக் மாத்திரைகளை பயன்படுத்தி மெதுவாக கொலை செய்ய முடியும் என்பதை அவர் கண்டுபிடித்து உள்ளார். இதன் காரணமாகவே டோலோ மாத்திரைகளை கொடுத்து ஷாரோனை கொலை செய்ய முயன்று இருக்கிறார்.

ஷரோன் மரணம்
ஆனால் ஷரோன் மரணம் அடையவில்லை. அவர் முழு உடல்நலத்துடன் இருந்திருக்கிறார் என்பதால் கோபம் அடைந்த கிரீஷ்மா பொறுமை இழந்து நேரடியாக கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். ஷரோனை வேகமாக கொன்றால்தான் பணக்கார மாப்பிள்ளையோடு செட்டில் ஆக முடியும் என்பதில் தீவிரமாக இருந்துள்ளார். அவர் இப்படி பொறுமை இழந்ததுதான் அவர் அவசரப்பட்டு கொலை செய்யவும் காரணமாக அமைந்தது என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!










Click it and Unblock the Notifications