படஷூட்டிங்கில் காதலிக்குமாறு தொல்லை.. விடாமல் துரத்திய சணல்குமார்.. மஞ்சு வாரியர் பரபரப்பு புகார்
திருவனந்தபுரம்: காதலிக்குமாறு கட்டாயப்படுத்துகிறார் என இயக்குநர் சணல்குமார் மீது நடிகை மஞ்சுவாரியர் புகார் கூறியுள்ளார்.
மலையாள திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான மஞ்சு வாரியர் 1995 ஆம் ஆண்டு சாக்ஷியம் எனும் மலையாள படம் மூலம் அறிமுகமாகினார். இதுவரை ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் திலிப்பின் முன்னாள் மனைவி ஆவார்.
திலிப் மீதான பாலியல் வழக்கு தொடர்பாக நடிகை மஞ்சு வாரியரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் எனும் படத்தில் மஞ்சுவாரியர் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

மஞ்சு வாரியர்
இந்த நிலையில் மஞ்சு வாரியரை காணவில்லை என இயக்குநர் சணல்குமார் சசிதரன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். மஞ்சு வாரியர் கந்து வட்டிக்காரர்களின் கட்டுப்பாட்டில் அவர்களது வீட்டுக்காவலில் இருப்பதாகவும் அவர்களால் மஞ்சுவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

4 நாட்கள்
இந்த பதிவு குறித்து 4 நாட்களுக்கு மேலாகியும் மஞ்சுவோ அவர் தரப்பினரோ எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால் தனக்கு சந்தேகம் வலுப்பதாக சணல்குமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் மஞ்சு வாரியர் கொச்சி போலீஸில் புகார் அளித்தார். அதில் சணல்குமார் சசிதரன் தன் மீது அவதூறு பரப்பி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

சணல்குமார் சசிதரன்
இந்த புகாரின் பேரில் சணல்குமார் சசிதரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மஞ்சு வாரியர் அளித்த புகார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சணல்குமார் இயக்கிய கயட்டம் படத்தின் படப்பிடிப்பின் போதே அவர் என்னை காதலிப்பதாக கூறினார். ஆனால் நான் அதை ஏற்க மறுத்தேன். எனினும் அவர் தொடர்ந்து என்னை காதலிப்பதாகவே தொலைபேசியில் கூறி வந்தார்.

காதலிக்க தொல்லை
நான் கடுமையாக எதிர்த்ததுடன் மறுத்தேன். சமூகவலைதளங்களிலும் என்னை காதலிக்க வலியுறுத்தி பதிவுகளை போட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நான் அவருடைய பதிவுகளை கண்டு கொள்ளாமல் இருந்தேன். பின்னர்தான் என்னை காணவில்லை என்ற பதிவை போட்டிருந்ததை அறிந்து அவர் மீது புகார் கொடுத்தேன் என மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications