Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த நொடி.. திடீரென படகு ஆட.. மேலே பதறி ஓடிய குழந்தைகள்! கேரளாவில் படகு மூழ்கிய போது.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் படகு விபத்தின் போது கடைசி நொடியில் நடந்தது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

கேரளாவில் நடந்த படகு விபத்து காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்து உள்ளது. மலப்புரத்தில் உள்ள தன்னூர் என்ற பகுதிக்கு அருகில் இருக்கும் தூவல் தீரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கே சுற்றுலா பயணிகள் சென்ற படகு மூழ்கி விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

இந்த படகிற்கு சொந்தக்காரர் நசீர் என்று கூறப்படுகிறது. அவரும் படகில் இருந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்து உள்ளனர். அந்த படகில் 20 பேர்தான் பயணம் செய்ய வேண்டும். ஆனால் 40 பேர் வரை ஏற்றப்பட்டு உள்ளனர்.

Recommended Video

    Worst In History | Kerala Boat விபத்து நடந்தது எப்படி? அதிக உயிரிழப்பு ஏன்? | Oneindia Tamil
    What happened to the kids while the Kerala Malappuram Boat House was sinking?

    அந்த படகிற்கு சுற்றுலாத்துறை அனுமதி உள்ளது. ஆனால் கடலில் செல்ல லைசன்ஸ் இல்லை. விபத்து நடந்த இடம் கடலுக்கு அருகே உள்ளே இடம். இது போன்ற படகுகள் கடலுக்கு அருகே செல்ல லைசன்ஸ் தேவை. ஆனால் அந்த லைசன்ஸ் படகு ஓனரிடம் இல்லை.

    அதோடு படகில் அதிக நபர்களை ஏற்றி இதற்கு முன்பே அவர் பயணம் செய்துள்ளார். அப்போதெல்லாம் மக்களும் இவரை கண்டித்து உள்ளனர். ஆனால் அதை இவர் கேட்டது இல்லை என்று கூறப்படுகிறது.

    நேற்று மாலை 6.30 மணி அளவில் படகில் பயணிகள் சென்று கொண்டு இருந்த போது திடீரென கப்பல் அப்படியே குலுங்கி, பல்டி அடித்து மூழ்கி உள்ளது. இதில் நீரில் மூழ்கிய பயணிகளை மீட்கும் பணிகள் நேற்று மாலையில் இருந்து நடந்து வருகிறது.

    What happened to the kids while the Kerala Malappuram Boat House was sinking?

    படகில் இரண்டு அடுக்குகள் இருந்துள்ளன. மேல்பகுதியில் மக்கள் நிற்கும் இடமும், கீழ்பகுதியில் இருக்கைகளும் இருந்துள்ளன. இச்சம்பவம் நடக்கும் போது படகில் அதிக அளவில் கூட்டம் இருந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பயணிகள் சென்றுள்ளனர்.

    படகு மூழ்கும் முன்பே ஆட தொடங்கிவிட்டது. அதிக எடை காரணமாக படகு வேகமாக குலுங்கி உள்ளது. அப்போது படகு இங்கும், அங்கும் மோசமாக ஆடியுள்ளது. இதை அடுத்து உள்ளே இருந்த படகு ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளர்.. எல்லோரையும் மேலே செல்ல கூறி உள்ளார்.

    இதில் வெயிட் ஒரு பக்கம் அதிகரித்து உள்ளது. குழந்தைகள் பலர் அலறி அடித்துக்கொண்டு மேலே ஓடி இருக்கின்றனர். மேலே சென்றால் படகு மூழ்கும் பட்சத்தில் கூடுதல் நேரம் கிடைக்கும் என்பதற்காக அப்படி செய்து உள்ளனர். ஆனால் அதுவே அவர்களுக்கு எமனாக மாறி உள்ளது. இதனால் படகு வேகமாக இங்கும் அங்கும் குலுங்க தொடங்கி உள்ளது.

    கடலுடன் இணையும் இடத்திற்கு அருகில் என்பதால் அந்த பகுதி மிகவும் ஆழமாக வேறு இருந்துள்ளது. அங்கே தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாநில மீட்பு படையினருடன் இணைந்து மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். அதேபோல் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கே நிறைய விதி மீறல்கள் நடந்து உள்ளன. மேலும் படகு உரிமையாளர் விதியை மீறி செயல்பட்டு உள்ளார். அவர் மீன்பிடி படகை சுற்றுலா சேவைக்காக மாற்றியதாக கூறப்படுகிறது. சுற்றுலாப் படகுகளுக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் படகு இயக்கப்பட்டதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+