அரபிக் கடலில் உருவான புயலுக்கு பெயர் வைத்தது எந்த நாடு.. பைபோர்ஜாய் என்றால் அர்த்தம் என்ன தெரியுமா?
திருவனந்தபுரம்: அரபிக் கடலில் உருவாகியுள்ள பைபோர்ஜாய் புயல் என்றால் என்ன, அந்த புயலுக்கு யார் பெயர் வைத்தது என்பது குறித்து பார்ப்போம்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது செவ்வாய்க்கிழமை காலை மேலும் வலுப்பெற்று புதன்கிழமை காலை வடக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது.

இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த பைபார்ஜாய் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டி தென்மேற்கு அரபிக் கடலில் கோவாவுக்கு 900 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு புயல் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்த புயலுக்கு பைபர்ஜோய் என பெயரிட்டதே வங்கதேசம்தான். கடந்த 2020ஆம் ஆண்டு முதல் உலக வானிலை ஆய்வு அமைப்பில் உள்ள நாடுகளால் பரிந்துரைக்கப்படும் பெயர்களே வெப்ப மண்டல புயல்களுக்கு பெயராக வைக்கப்படுகிறது. அதன்படி இந்த புயலுக்கு பைபோர்ஜாய் என வங்கதேசம் வைத்துள்ளது.
பைபோர்ஜாய் என்றால் பேரிடர் என்பது அர்த்தமாகும். இந்த புயல் ஓமன் அல்லது ஏமன் பக்கம் செல்லும் என சொல்லப்படுகிறது. இந்த புயல் கொங்கன்- கோவா- மகாராஷ்டிரா கடற்கரைகளில் ஜூன் 8 முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை லேசான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். அது போல் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பைபோர்ஜாய் புயலால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாகிறது. பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் இந்த சீசன், தற்போது வரை தொடங்கவில்லை. இந்த புயலானது அரபிக் கடலில் வந்து தென்மேற்கு பருவமழைக்கான ஈரக்காற்றை இழுத்துச் சென்றுவிடுவதால் சீசன் வரும் 11 ஆம் தேதிக்குள் தொடங்கும் என தெரிகிறது.
ஜூன்9 முதல் 12 வரை குஜராத் கடலோரத்தில் இருக்கும். புயலுக்கு வைக்கப்படும் பெயர்கள் எளிதாகவும் மக்களுக்கு புரியும்படியும் வைக்கப்படுகிறது. அந்த பெயர்கள் சர்ச்சையை ஏற்படுத்துவது போல் இருக்காது. இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடு ஒரு குறிப்பிட்ட பெயர் பட்டியலை கொடுக்கும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications