தட்டி தூக்கிய போலீஸ்.. கேரளாவில் ரயில் பயணிகள் மீது தீ வைத்த குற்றவாளி உ.பி.யில் அதிரடி கைது
திருவனந்தபுரம்: கண்ணூருக்குச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், சக பயணிகள் மீது தீ வைத்த குற்றவாளியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. உத்தரபிதேசத்தில் பதுங்கியிருந்த ஷாருக் ஷபி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். .
வழக்கமாக, கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து மதியம் 2.55 மணிக்கு கிளம்பும் எக்ஸ்பிரஸ் ரயிலானது, அன்றைய தினம் இரவு 10.55க்கு கண்ணூரை சென்றடைவது வழக்கம்.
ஆனால், ஏப்ரல் 2ம் தேதி மதியம் வழக்கம்போல பயணிகளுடன் ஆலப்புழாவில் இருந்து கிளம்பிய எக்ஸ்பிரஸ் ரயில், கோழிக்கோடு அருகே சென்று கொண்டிருந்தது.

3 பேர் பலி
அப்போதுதான் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறார்.. இந்த தீயானது, மளமளவென எரிய துவங்கியதுமே, பதற்றமடைந்த 3 பேர், ரயிலில் இருந்து குதித்துவிட்டனர். இதில் பெண் ஒருவர், ஒரு ஆண் குழந்தை, என 3 பேருமே தண்டவாளத்திலேயே படுகாயமடைந்து இறந்துவிட்டனர். சஹாரா, ரஹ்மத், சவுபிக் ஆகிய 3 பேரின் சடலங்களும் தண்டவாளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டன.... இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

கண்காணிப்பு
இதனிடையே, ஓடும் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், என்ஐஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது... ஒருவேளை இந்த தீ வைப்பு சம்பவத்தில் ஏதேனும் தீவிரவாத சதி இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணைகள் தீவிரமாகி வருகின்றன.. ரயில் பயணிகள், மற்றும் பொதுமக்கள் தெரிவித்த அடையாளங்களை வைத்து குற்றவாளியின் படம் கணிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய அடையாளத்தை வைத்து, தீ வைத்த அந்த மர்ம நபரின் உருவப்படத்தை வரைந்து போலீசாரும் அதை வெளியிட்டனர்.

ராஷிக்
முக்கிய சாட்சியான ராஷிக்கின் உதவியுடன், அந்த வரைபடம் வரைந்ததாக தெரிகிறது. அந்த உருவப்படத்தில் உள்ள அடையாளத்தின்படி, கண்ணூர் அரசு மருத்துவமனையில் ஒருவர் காணப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. ஞாயிறன்று இரவு, அந்த உருவப்படத்தின் அடையாளம் கொண்ட நபர் ஒருவர், கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்ததாக தெரிகிறது.. ஆனால் விசாரணையில், அது அந்த மர்ம நபர் அல்ல என்று போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளின் மூலம், அது தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் அல்ல என்பது உறுதியாகியிருக்கிறது.

தச்சன்
ஆனால், இந்த விசாரணையில் ஒரு பை-யை தண்டவாளத்தில் இருந்து மீட்டுள்ளனர்.. அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சொந்தமானது என்று சந்தேகிக்கப்படுகிறது.. மேலும், பெட்ரோல் அடங்கிய பாட்டில், ஊர் பெயர்களின் குறிப்பு, ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்ட டைரி, இயர்போனின் கவர், 2 மொபைல் போன்கள், சாப்பாடு நிரப்பப்பட்ட டிபன் பாக்ஸ், மணிபர்ஸ், டி-சர்ட், போன்றவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இவை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், கோவளம், குளச்சல், கன்னியாகுமரி போன்ற இடங்களின் பெயர்கள் குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தச்சன் தச்சன்
அந்த குறிப்பேட்டில் முக்கியமான துருப்பு என்னவென்றால், தச்சன் என்ற வார்த்தை மறுபடியும் மறுபடியும் காணப்பட்டது.. அந்த நபர் தச்சுத்தொழில் செய்பவர் என்றும், 30 வயதுடைய நபர் என்றும் கூறப்பட்டது.. இவர் நொய்டாவை சேர்ந்தவராம்.. ஆனால், சந்தேகிக்கப்படும் நபர் அரசியல் சார்பற்ற நபராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றாலும், இந்த தீ வைப்பு சம்பவத்தின் பின்னணி முழுமையாக தெரியவில்லை. இது பழிவாங்கல் நடவடிக்கையா? அல்லது தீவிரவாத செயல்பாடுகளா? என்றும் தெரியவில்லை.

யார் அந்த மர்மநபர்?
அதனால்தான், இதற்காக சிறப்பு புலனாய்வு குழுவும் நியமிக்கப்படும் என்றும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கு துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், 18 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்படும் என்று பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.. ஆனால், மாநில சட்ட அமலாக்க முகமைகள் உள்ளடக்கிய கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை விடுத்து வந்தன.. இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட உள்ளதாக கேரள காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், விசாரணைகள் துரிதமாகின.

அதிரடி கைது
இதையடுத்து, கேரளா ரயில் தீ விபத்தில் சந்தேகிக்கும் நபர் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக புலனாய்வு குழு அதிகாரிகள் நொய்டா விரைந்துள்ளனர். கோழிக்கோட்டில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு விரைந்தனர்... அதன்படி, ரயிலில் பயணிகளுக்கு தீவைத்த ஷாருக் சைபி உத்தரபிரதேசத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.. புலந்த் சாகரில் ஷாருக் சைபி பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் அதிகாரிகள் அதிரடி விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications