திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்வாண போட்டோக்களை.. மாறி மாறி டாக்டருக்கு அனுப்பிய 2 பெண்கள்.. மிரண்டு போன போலீசார்

டாக்டரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பெண்கள் கைதானார்கள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: நிர்வாண போட்டோக்களை அனுப்பி அனுப்பி, டாக்டரை மிரட்டி உள்ளனர் 2 பெண்கள்.. அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஷா நவாஸ்... 32 வயதாகிறது.. இவர் ஒரு டாக்டர்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது.

இந்தியா மாஸ்டர்பிளான்! மேற்கு உலகமே திரண்டு வந்தாலும்.. ரஷ்யாவை எதிர்க்காத மோடி.. 5 பெரிய காரணங்கள்! இந்தியா மாஸ்டர்பிளான்! மேற்கு உலகமே திரண்டு வந்தாலும்.. ரஷ்யாவை எதிர்க்காத மோடி.. 5 பெரிய காரணங்கள்!

அது புது நம்பரில் இருந்து வந்ததால், டாக்டர் அந்த மெசஜை பார்க்கவில்லை.. பதில் அளிக்கவும் இல்லை.. பிறகு மறுபடியும் அதே நம்பரில் இருந்து மெசேஜ்கள் வரவும், அதை ஓபன் செய்து பார்த்துள்ளார்..

 நிர்வாண போட்டோக்கள்

நிர்வாண போட்டோக்கள்

2 பெண்களின் நிர்வாண போட்டோக்கள் வந்திருந்தன.. அந்த போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷா, உடனே அந்த நம்பருக்கு போன் செய்தார்.. ஆனால், யாருமே பதிலளிக்கவில்லை.. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அந்த பெண்ணின் எண்ணிலிருந்து 3 லட்சம் ரூபாய் தராவிட்டால் போலீசில் புகார் செய்யப்படும் என தகவல் வந்தது. பணம் தராவிட்டால் டாக்டர் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்படும் அந்த பெண்கள் மிரட்டியுள்ளனர்.

மறுப்பு

மறுப்பு

பணமெல்லாம் தர முடியாது என்று டாக்டர் மறுத்துவிட்டார்.. ஆனால் வேறு ஒரு அழைப்பு டாக்டருக்கு வந்துள்ளது.. அது வெளிநாட்டில் இருந்து ஆன்லைன் போன் என்பது தெரியவந்தது.. தொடர்ந்து இப்படி புது புது நம்பரில் இருந்து போன்கள் வந்து கொண்டே இருக்கவும், பயந்து போன டாக்டர் உடனடியாக போலீசில் புகார் தந்தார்.. இதையடுத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. ஆனால், மிரட்டி பணம் கேட்பது யார் என்பதை தெரிந்து கொள்வதறகாக, கடந்த சில நாட்களாக டாக்டரின் வாட்ஸ்அப்பை போலீசாரே பயன்படுத்தி வந்தனர்.

 பெங்களூர்

பெங்களூர்

இந்நிலையில், மறுபடியும் போன் வந்தது.. போலீசாரே டாக்டர் போல பேசினார்கள்.. 3 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று போனில் அவர்கள் கேட்டனர்.. போலீசாரும் பணத்தை தருவதாக ஒப்புக் கொண்டனர்.. அப்படியானால் திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் பணத்துடன் காத்திருக்கும்படியும், பெங்களூரில் இருந்து 29 வயது பெண் அந்த பணத்தை பெற்றுக் கொள்ள ஸ்டேஷனுக்கு வருவார் என்றும் சொல்லப்பட்டது.. அதன்படியே போலீசாரும் தயாரானார்கள்.

 சுற்றி வளைப்பு

சுற்றி வளைப்பு

குறிப்பிட்ட நேரத்தில் திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும்படி டாக்டருக்கும் தகவல் அனுப்பினார்கள் போலீசார்.. அதன்படியே, ரயில்வே ஸ்டேஷனுக்கு பெங்களூர் பெண் வந்தார்.. போலீசார் மறைந்து கொள்ள, தன்னுடைய கார் அருகிலேயே டாக்டர் நின்று கொண்டிருந்தார்.. டாக்டரை பார்த்துவிட்ட பெண், அவரது கார் அருகே நெருங்கி வந்தார்..

நிஷா

நிஷா

அப்போது மறைந்திருந்த போலீசார் அந்த பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்தனர்.. அவரிடம் விசாரணையும் நடத்தினர்.. சம்பந்தப்பட்ட பெண் காயங்குளத்தை சேர்ந்த நிஷா என்பது தெரியவந்தது.. நிஷாவை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லும்போது, அவரது செல்போன் அடித்து கொண்டிருந்தது.. அதனால் போலீசார், ஸ்பீக்கரை அன் செய்துவிட்டு பேசுமாறு நிஷாவிடம் சொலலி உள்ளனர.. நிஷாவும் ஸ்பீக்கரை ஆன் செய்தார்..

விசாரணை

விசாரணை

அப்போது, மண்ணுத்தியை சேர்ந்த நௌஃபியா என்ற பெண், "3 லட்சம் வாங்கிட்டியா? உடனே வந்து என்கிட்ட தந்துடு, என்கிட்ட இருந்து நீ தப்ப முடியாது" என்று மிரட்டினார்.. இதையடுத்து நௌஃபியாவை பணம் வாங்குவதற்கு குறிப்பிட்ட இடத்துக்கு வரும்படி நிஷாவை சொல்ல சொன்னார்கள் போலீசார்.. நிஷா சொன்னதை நம்பி நௌஃபியா விரைந்து வந்தார்.. ஆனால் அவரையும் போலீசார் மடக்கி பிடித்துவிட்டனர்.. 2 பெண்களிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கைதான இருவருமே நெருங்கிய தோழிகளாம்..!

English summary
Why did Kerala police arrest 2 women? What happened in the Doctor affair?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X