திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் ரகசிய அறை திறக்கப்படாதது ஏன்? என்ன இருக்கு.. மகாராணி விளக்கம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 ரகசிய அறைகள் இருக்கினற்ன. இதில் கடந்த 2011ம் ஆண்டு ஐந்து அறைகள் திறக்கப்பட்டன. இவற்றில் பல லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பி என்ற ஒரு ரகசிய அறை இன்று வரை திறக்கப்படவே இல்லை.. ரகசிய அறை திறக்கப்படாததற்கு காரணம் என்ன என்பது குறித்து அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமி பாய் மகாராணி விளக்கம் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் என்பது இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றகோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் தெளிவான பெயர் ஆகும்.. மகாவிஷ்ணுவின் இக்கோவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்திருக்கிறது. இக்கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகாவிஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்துள்ளது. சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பியதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் 1686-ல், தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலை கொள்ளை அடிக்க முயற்சிகள் அந்த காலத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
இதன்படி அதில் 5 அறைகள் கடந்த 2011-ம் ஆண்டு திறந்து பார்க்கப்பட்டது. அப்போது அந்த அறைகளில் தங்கம், வைரம், வைடூரியம், விலை உயர்ந்த மாணிக்க, மரகத கற்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றின் அப்போதைய மதிப்பு பல லட்சம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. தற்போது அவற்றின் மதிப்பு இப்போது பல மடங்கு உயர்ந்துவிட்டது.
ஆனால் அதே ஆண்டில் கிருஷ்ண விலாசம் கொட்டாரத்தில் வேத பண்டிதர்கள் தலைமையில் நடைபெற்ற அஷ்டமங்கல தேவ பிரசன்னத்தில் 'பி' ரகசிய அறையை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. 'பி' ரகசிய அறையில் கொடூர பாம்புகள் காவல் நிற்பதாகவும், அந்த அறையை திறந்தால் தீமையான சம்பவங்கள் நிகழும் என்றும் தகவல்கள் பரவின.
இந்தநிலையில், 'பி' ரகசிய அறை திறக்காமல் இருக்க உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து திருவிதாங்கூர் ராஜ குடும்ப உறுப்பினரான அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமி பாய் மகாராணி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் 'பி' ரகசிய அறை எனக்கு தெரிந்தவரை திறக்கப்படவில்லை. முந்தைய காலங்களில் திறக்கப்பட்டு இருக்கலாம். அந்த அறையின் முன் பகுதியில் இரும்பு கவசத்துடன் கூடிய நீளமான திண்ணை இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன் எல்லோரும் கற்பனையில் கூறுவதை போல் பெரிய இரும்பு கதவுகளோ, கொடூர பாம்புகளின் வடிவங்களோ அங்கு கிடையாது.
'பி' ரகசிய அறையில் முனிவர்கள், தேவர்கள் பத்மநாபனை நோக்கி தியானம் செய்யும் இடம் உள்ளது. நடுப்பகுதியில் சக்கரத்தின் சக்தியுடன் கூடிய மூல பிம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால் அதனை சரி செய்ய இயலாது மேலும் யக்சியம்மன் தவம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. 'பி' ரகசிய அறையில், அதி சக்தி வாய்ந்த நரசிங்க சாமி குடியிருப்பதாக நம்பப்படுவதால் அந்த அறை திறக்கப்படவில்லை என்று கூறினார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications