• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

காம களியாட்டம்.. மனைவிகளை மாற்றிய தமிழ் "புள்ளிகள்".. சிக்கும் விஐபிக்கள்.. வெளியான பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மனைவிகளை மாற்றி உல்லாசம் காணும் விவகாரம் குறித்து மேலும் சில பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. கேரளாவையே உலுக்கி எடுத்து வரும் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் முக்கிய நபரை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்..!

3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த பெண் தன் கணவன் மீது போலீஸில் புகார் தந்தால்தான் இப்படி ஒரு விஷயமே வெளியே தெரியவந்தது.
கணவர் மற்றவர்களுடன் உறவில் ஈடுபட வற்புறுத்துவதாகவும், அவரிடமிருந்து தன்னை காப்பாற்றும்படியும் புகாரில் கூறியிருந்தார்..

 ஆலப்புழா

ஆலப்புழா

ஆனால், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோதுதான், மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.. ஆலப்புழை, கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த 7 பேர் கைதானார்கள்.. இதற்கு பிறகு கப்பிள்ஸ் மீட் என்ற குரூப் பற்றி தெரியவந்தது.. இதற்கு பிறகு மேலும் 5 பேர் கைதானார்கள்.. அவர்களின் லேப்டாப்கள், குரூப்கள் குறித்த ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது.

 சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

இப்படிப்பட்ட சூழலில், மேலும் சில தகவல்கள் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.. இப்படி மனைவிகளை மாற்றி கொள்வது பற்றி 2 வருடங்களுக்கு முன்பே போலீசில் புகார் தரப்பட்டதாம்.. இந்த புகார் தரும்போது, சோஷியல் மீடியாவில் இந்த அளவுக்கு குரூப்கள் உருவாக்கப்படவில்லை.. உறுப்பினர்களாக இருந்த தம்பதிகளும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்துள்ளனர்.. ஆனால், மனைவிகளை மாற்றி கொள்வது குறித்து புகார் தரப்பட்டுள்ளது.

 கோட்டயம்

கோட்டயம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கோட்டயம் போலீசில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது போலீசார் புகாரை பொருட்படுத்தவில்லையாம்.. மாறாக, பெண்ணின் கணவரை அழைத்து சமரசம் செய்து வைத்துள்ள தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.. இதுதான் தற்போது கேரளாவில் சலசலப்பை கிளப்பி வருகிறது.. இந்த சமூக வலைத்தள குழுவில் பல முக்கிய புள்ளிகளின் மனைவிகளும் இணைந்து இருந்ததால் அதனை கண்டு கொள்ளாமல் போலீசார் இருந்து உள்ளதாகவும் காரணம் வெளியாகி உள்ளது.

 தமிழ்நாடு

தமிழ்நாடு

இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது.. மனைவிகளை மாற்றி உடலுறவு கொள்ளும் இந்த குழுவில் தமிழக பிரமுகர்களும் இருக்கிறார்களாம்.. அவர்கள் யார் என்று தெரியவில்லை.. தமிழ்நாட்டை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவிகளும் சிக்கி இருக்கிறார்கள் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. அவர்களும் இந்த குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... அதுமட்டுமல்ல, இவர்களில் பெரும்பாலும் டாக்டர்கள், வக்கீல்கள், அரசியல்வாதிகள் என்ற முக்கிய புள்ளிகள் ஆவர்.. அதனால், இவர்கள் எங்கு சென்று வந்தாலும் யாரும் கண்டுகொள்ளாத நிலை இருந்து வந்துள்ளது... இவர்கள் மீது யாருக்கும் சந்தேகமும் வராமல் இருந்திருக்கிறது.

 வெளிமாநிலம்

வெளிமாநிலம்

கேரளாவை தவிர வெளிமாநில பிரமுகர்கள் அதில் உறுப்பினர்களாக இருப்பதாக கூறப்பட்டது.. ஆனால், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளது தற்போதுதான் தெரியவருகிறது. மொத்தம் 14 குழுக்கள் இயங்கி வந்த நிலையில், பலரும் குரூப்பில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.. பலரும் தலைமறைவாக இருக்கின்றனர்.. இதில் வெளிநாட்டுக்கு ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.. அவர்தான் இந்த குரூப்பின் முக்கியமான அட்மின் என்கிறார்கள்.

கொச்சி

கொச்சி

இதனிடையே, கொச்சியில் மாநில மகளிர் ஆணைய தலைவி பி.சதி தேவி செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் சொன்னபோது, "கப்பிள் சுவாப்பிங், ஒய்ப் சுவாப்பிங் சமூக வலைத்தள கும்பல் குறித்தான முழு விவரங்களையும் வெளிக்கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்... இந்த குழுக்களால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், கணவர் உட்பட பல்வேறு ஆண்களால் சொல்லி மாளாத பல இன்னல்களை அனுபவித்து உள்ளனர்..

 துணிச்சல்

துணிச்சல்

இது போல் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த அநாகரீக வலையில் சிக்கி சீரழிக்கப்பட்டு இருக்கலாம்... இளம்பெண்ணின் துணிச்சல்மிக்க புகாரின் பேரிலேயே இந்த சமூக விரோத செயல்பாடுகள் வெளிஉலகுக்கு தெரிய வந்துள்ளது. மாநில போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் உயர் மட்ட குழு அமைத்து மனைவிகளை கைமாற்றும் சமூகவிரோத கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Summary: Kerala wife swapping case: Wife swapping case key accused escaped and cyber crime police investigation is going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X