காத்திருந்து காத்திருந்து! தனித்துவமான குரலால்! மனதை மயக்க வைத்த ஜெயசந்திரன்! மறக்க முடியாத பாடல்கள்
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த ஜெயச்சந்திரன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் பத்தாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். தனது தனித்துவமான குரலால் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஜெயச்சந்திரன்.. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதுடி.. மயங்கினேன் சொல்ல தயங்கினேன்.. என அவர் பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கின்றன. நடிகர் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தின் சொல்லாமலே யார் பார்த்தது என்ற மெகா ஹிட் பாடலும் இவர் பாடியது தான்.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் இன்று காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் இன்று மரணமடைந்தார். தமிழில் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. என்பது உள்ளிட்ட பல மனதை மயக்கும் பாடல்களை இவர் பாடியுள்ளார்.

கேரளாவின் கொச்சியில் கடந்த 1944 ஆம் ஆண்டு மார்ச் 3 ம் தேதி பிறந்தார் ஜெயச்சந்திரன். இவரது இயற்பெயர் பலியத் ஜெயச்சந்திரகுட்டன். தற்போதுள்ள 2கே கிட்ஸ்களுக்கு இவரை அதிகம் தெரியாது என்றாலும், இவர் பாடிய பல பாடல்கள் அவர்களுக்கு தெரியாமல் இருக்காது. அந்த அளவுக்கு இவர் பாடிய பாடல்கள் இனிமையாக இருக்கும் என்று செல்லலாம். 80 மற்றும் 90களில் வாழ்ந்தவர்கள் இவரது பாடல்களை ரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.
ஜெயச்சந்திரன் முதன் முதலாக கடந்த 1967 ஆம் ஆண்டில், பி. வேணுவின் இயக்கத்தில் எம்.எஸ். பாபுராஜ் இசையில் அனுராக கானம் போலே என்ற பாடலை பாடி திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து அப்போதைய இசையமைப்பாளர்கள் பலரது இசையிலும் பாடல்களை பாட ஆரம்பித்தார். குறிப்பாக 1972 ஆம் ஆண்டில் பணிதீராத்த வீடு என்ற படத்துக்காக கேரள அரசின் சிறந்த பின்னணி பாடகர் விருதைப் பெற்றார் ஜெயச்சந்திரன்.
இதன்பின்னர் இளையராஜா இசையிலும் பல பாடல்களை பாடத்தொடங்கினார். இதன் மூலமாக தமிழர்கள் பலருக்கும் ஜெயச்சந்திரன் பற்றி தெரிய வந்தது. ஜெயச்சந்திரன் பாடிய, ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது.. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. மயங்கினேன் சொல்ல தயங்கினேன்.. என பல பாடல்களை பாடியுள்ளார்.
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில், கிழக்குச் சீமையிலே படத்தில் கத்தாழம் காட்டுவழி என்ற பாடலை பாடினார். இதற்கு முன்பாக கடந்த 1975 ஆம் ஆண்டில் ரஹ்மானின் தந்தை ஆர்.கே. சேகர் இசையில் பெண்படா படத்தில் ஜெயச்சந்திரன் பாடல் பாடியிருக்கிறார்.
நடிகர் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தின் சொல்லாமலே யார் பார்த்தது என்ற மெகா ஹிட் பாடலும் இவர் பாடியது தான். சின்ன பூவே மெல்ல பேசு.. கடவுள் வாழும் கோவிலிலே.. வண்டி மாடு எட்டு வச்சி.. இது காதலின் சங்கீதம்.. ராசாத்தி உன்ன காணாத .. காளிதாசன் கண்ணதாசன்.. கொடியிலே மல்லிகைப்பூ.. அந்திநேர தென்றல் காற்று.. என தமிழில் இவர் பாடிய பாடல்கள் பலவும் இன்றும் கிராமங்கள் மட்டும் இன்றி மூலை முடுக்கெல்லாம் ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications