'கூகுள் மேப்’ செய்த சம்பவம்.. காரோடு ஆற்றுக்குள் பாய்ந்த இளைஞர்கள்.. மயிரிழையில் கிரேட் எஸ்கேப்
திருவனந்தபுரம்: கேரளாவில் கூகுள் மேப்ஸ் பார்த்து காரில் சென்ற கர்நாடக இளைஞர்கள், காசர்கோடு அருகே ஆற்றுபாலம் ஒன்று மூழ்கியது தெரியாமல் காரை ஓட்டியிருக்கிறார்கள். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கார் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
சொந்த வாகனங்களில் வழி தெரியாத புதிய இடங்களுக்கு செல்வது என்றால் முன்பெல்லாம் வழியில் வரும் மக்களிடம் கேட்டு கேட்டு சென்று விடுவார்கள். சில நேரங்களில் யாராவது தவறான வழியை சொல்லி பல கிலோ மீட்டர் சுற்றும் நிலையும் ஏற்படும். தற்போது தகவல் தொழில் நுட்பம் பெருகிவிட்டதால், யாரிடமும் வழி கேட்காமல் கன்னியாகுமாரியில் இருந்து காஷ்மீருக்கே சென்று விடலாம்...

கூகுள் மேப்ஸ்: கூகுள் மேப்ஸ் உதவியால் குக்கிராமங்களுக்கு கூட சென்று விடலாம். இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி நினைத்த இடங்களுக்கு செல்கிறார்கள். ஆனாலும் கூட கூகுள் மேப்ஸ்சை அப்படியே நூல் பிடித்தால் போல செல்வது சில நேரம் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் கூகுள் மேப்சை சரியாக பயன்படுத்த தெரியாமல் பயன்படுத்தி நடந்து செல்லும் பாதையில் போய் கார் சிக்கிக் கொண்ட நிகழ்வுகளும் நடைபெற்று இருக்கின்றன.
அடிக்கடி சம்பவம்: அதுபோல, கூகுள் மேப்சை நம்பி சென்று அடிக்க்கடி நீர்நிலைகளில் வாகனத்தோடு வாகன ஓட்டிகள் சிக்கிக் கொண்ட சம்பவங்களும் கேரளாவில் அடிக்கடி நடப்பதை காண முடிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கூட ஆலப்புழா அருகே கூகுள் மேப்ஸ் பார்த்து காரில் சென்ற இளைஞர்கள், காருடன் ஓடை ஒன்றில் சிக்கி கொண்டனர். பின்னர் உள்ளூர் மக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
ஆற்றுக்குள் பாய்ந்த கார்: இந்த ஒரு சம்பவம் மட்டும் இல்லை.. இது போன்ற பல சம்பவங்கள் கேரளாவில் நடந்துள்ளன. தற்போது அந்த வரிசையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கார் ஒன்றில் தங்கள் மாநிலம் நோக்கி சென்றுள்ளனர். வழி தெரியாதாதால் கூகுள் மேப்ஸ்சை ஆன் செய்துவிட்டு அது காட்டிய வழியில் சென்றுள்ளனர்.
தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கார்அப்போது, கேரளாவின் காசர்கோடு அருகே உள்ள பள்ளஞ்சி அருகே வந்த போது குறுகிய பாலம் இருந்துள்ளது. கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருவதால் ஆற்றுப்பாலம் மூழ்கடித்தபடி தண்ணீர் ஓடியது. ஆனால் கூகுள் மேப்ஸ், அந்த வழியாக செல்லலாம் என காட்டியதால், அதை நம்பி காரை செலுத்தியுள்ளனர். ஆனால் கார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
இளைஞர்கள் மீட்பு: அதிர்ஷ்டவசமாக அங்குள்ள ஒரு மரத்தில் கார் சிக்கிக் கொண்டது. இதனால், காரில் இருந்து தப்பிய இளைஞர்கள் உடனடியாக உதவி கேட்டு குரல் கொடுத்தனர். இதையடுத்து தீ அணைப்பு படையினர் விரைந்து வந்து அவர்களை பத்திரமாக மீட்டனர்.
துல்லியமாக இல்லை: கூகுள் மேப்ஸ்சை பொறுத்தவரை தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்படுவதாகவும் கூகுள் கூறுகிறது. செயற்கை கோள் இமேஜ், ஸ்ட்ரீட் வியூஸ் கார்ச்ல், கூகுள் மேப்ஸ் பயனர்கள் உள்ளிட்ட தரவுகளின்படி அடிக்கடி அப்டேட் செய்யபடுவதாக கூறினாலும் ரியல் டைம் அப்டேட் ஆவதில் கூகுள் மேப்ஸ் துல்லியமாக இருப்பது இல்லை என்று பயனர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications