கேரளாவில் தீயாக பரவும் ஜிக்கா.. குழந்தைகளுக்கும் பாதிப்பு.. தமிழ்நாடு பார்டரில் அதிகரிக்கும் கேஸ்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஜிக்கா வைரஸ் தற்போது தீயாக பரவி வருகிறது. தினசரி கேஸ்கள் கேரளாவில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
Recommended Video
கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் குறையாமல் பரவிக் கொண்டு இருக்கிறது. தினசரி கேஸ்கள் 14 ஆயிரத்திற்கும் அதிகமாக கேரளாவில் பதிவாகி வருகிறது. நேற்று கேரளாவில் 14,539 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
இதன் மூலம் கேரளாவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1,15,184 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையை விட புதிய கேஸ்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கேரளாவில் கொரோனா ஒரு பக்கம் தீயாக பரவி வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஜிக்கா வைரஸ் பரவி வருகிறது.

ஜிக்கா வைரஸ்
ஜிக்கா வைரஸ் தற்போது கேரளாவில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. நேற்று வரை 18 பேர் மட்டுமே கேரளாவில் ஜிக்கா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தற்போது கேரளாவில் ஜிக்கா வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக அங்கு 6 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம்
கடந்த வாரம் கேரளாவில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு தொடங்கியது. திருவனந்தபுரத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இந்த பாதிப்பு முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. திருவனந்தபுரம் தமிழ்நாடு பார்டர் அருகே இருக்கும் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்குத்தான் முதலில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின் வரிசையாக பலருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அண்டை மாவட்டங்களுக்கும் கேஸ்கள் பரவ தொடங்கி உள்ளது.

கேஸ்கள்
கோழிக்கோடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களிலும் தற்போது ஜிக்கா வைரஸ் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. கேரளாவிலேயே தற்போது இதற்கான சோதனை மையங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் நேற்று 22 மாதமே ஆன குழந்தை ஒன்றுக்கும் ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு எல்லையோர கிராமங்களில் கேரளாவில் ஜிக்கா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

எல்லை கிராமம்
இதனால் கேரளாவை ஒட்டி இருக்கும் தமிழ்நாடு கிராமங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கேரளாவில் இருந்து குப்பைகள், கழிவுகள் தமிழ்நாடு வருகிறதா என்றும் கவனமாக எல்லையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து கேரளாவில் ஜிக்கா வைரஸ் பரவல் குறித்து ஆராய மத்திய சுகாதாரத்துறையின் 6 பேர் கொண்ட குழு அந்த மாநிலத்திற்கு சென்றுள்ளது.

எப்படி பரவும்
ஜிக்கா வைரஸ் கிட்டத்தட்ட டெங்கு வைரஸ் போன்றதாகும். இந்த வைரஸ் கொசுக்கள் மூலம் பரவ கூடியது. உடலில் தடிப்புகள், காய்ச்சல், தோல் சிவப்பது. எலும்பு வலி ஆகியவை ஜிக்கா வைரஸ் ஏற்பட்டால் உண்டாகும். உகாண்டாவில் 1947ல் குரங்குகளுக்கு இந்த வைரஸ் தாக்கியது. 1952ல் பின் மனிதர்களுக்கு தாக்கியது. பின்னர் பல்வேறு ஆப்ரிக்க, ஆசிய நாடுகளுக்கு கொசுக்கள் மூலம் பரவியது குறிப்பிடத்தக்கது.

உடலுறவு
உடலுறுவு மூலம் கர்ப்பிணிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் நோய் கட்டுப்பாட்டு துறை நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது ஜிக்கா பரவல் காரணமாக யாரும் மரணம் அடையவில்லை. ஜிக்கா காரணமாக பலி ஆவது மிகவும் அரிதானது. ஆனால் கடுமையான காய்ச்சல் ஏற்படும்.












Click it and Unblock the Notifications