வால்பாறை அதிரப்பள்ளி சாலையில்.. கேரள சுற்றுலா பயணிகள் வந்த கார்.. யாருமே நம்ப முடியாத சம்பவம்
வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை கோவை மாவட்டத்தில் உள்ள அற்புதமான சுற்றுலா தலம் ஆகும். பொள்ளாச்சியில் இருந்து போகும் போதே மனசெல்லாம் ஆனந்தமாகிவிடும். ஆனால் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களைவிட வால்பாறையில் யானை - மனித மோதல்கள் அதிகம்.. வால்பாறை அதிரப்பள்ளி செல்லும் சாலையில் கேரள சுற்றுலாப் பயணிகளின் கார் ஒன்று பழுதடைந்தது. மெக்கானிக்கை அழைத்து வரலாம் என்று சென்றவர்கள் திரும்பி வந்த போது, காட்டுயானைகள் காரைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு சேதப்படுத்தி உள்ளன.
வால்பாறையை பொறுத்தவரை வனவிலங்குகள் அதிகம் உள்ள தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதி என்பதால், அங்கு இரவு நேரங்களில் செல்வது ஆபத்தானதாக உள்ளது. எப்படி ஊட்டி, மைசூர் சாலையில் உள்ள முதுமலை வனப்பகுதி இரவு நேரங்களில் ஆபத்தானது என்று போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதோ, அதுபோல் தான் வால்பாறையிலும் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் இரவில் பயணிக்கக்கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது. ஆனால் அதையும் மீறி பயணித்து சிக்கலில் சிக்குவது நடக்கிறது.

ஆயுத பூஜை, தசரா பண்டிகை காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பலரும் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, வாகமன், தேக்கடி, ஏற்காடு, சிக்மங்களூரு என பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் வால்பாறைக்கும் பலர் சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர்.
அப்படித்தான் கேரளாவின் அங்கமாலி பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலையில் வால்பாறைக்கு இரண்டு கார்களில் சுற்றுலாப் பயணிகள் வந்திருக்கிறர்கள். அவர்கள் வன பகுதியில் வாட்ச் மரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் வந்த காரில், ஒரு கார் பழுதாகி நின்றது. அதை சரி செய்வதற்காக மற்றொரு காரில் ஏறி சாலக்குடி பகுதிக்கு சென்று மெக்கானிக் அழைத்து வந்துள்ளார்கள். அப்போது அங்கு வந்த ஐந்து காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் பழுதான காரை தாக்கி, தலைகீழாகப் புரட்டிப் போட்டு சேதப்படுத்தியது. இதை பார்த்து கேரள சுற்றுலா பயணிகள் ஆடிப்போனார்கள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
பொதுவாக வனவிலங்குகள் தங்கள் எல்லைக்குள் மனித நடமாட்டத்தையோ அல்லது வாகனத்தையே பார்க்கும் போது, அவற்றைத் தாக்கி தங்கள் பகுதியிலிருந்து விரட்ட முயற்சிக்கும். யானைகள் தங்கள் வழித்தடங்களில் அல்லது ஓய்வெடுக்கும் இடங்களில் இடையூறு ஏற்பட்டால் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது இயல்பு. எனவே வால்பாறையை பொறுத்தவரை வனவிலங்குகளின் நடமாட்டம் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மிகவும் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் வால்பாறை மலைப்பாதைகளில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
யானைகள் சாலையைக் கடக்கும்போது திடீரென பிரேக் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்..
வாகனத்தை மிதமான வேகத்தில் ஓட்ட வேண்டும். குறிப்பாக யானைகளைப் பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ சாலை நடுவில் அல்லது வனப் பகுதிகளில் வாகனத்தை நிறுத்தவே கூடாது. அப்படி செய்வது யானையை ஆத்திரமூட்டும் வாய்ப்பு உள்ளது . பொதுவாக யானை அருகிலிருந்தால், கூச்சலிடவோ, ஹாரன் அடிக்கவோ அல்லது ஒளியைப் பாய்ச்சவோ கூடாது. அமைதியாக, சிறிது தூரம் பின்னால் சென்று, யானை தானாகச் சாலையைக் கடக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதேபோல், மலைவாசல் தளங்களில் உணவுப் பொட்டலங்கள் அல்லது குப்பைகளைச் சாலையோரங்களில் எறியக்கூடாது. இதுவே பெரிய வனவிலங்குகளை சாலைக்கு வர வைக்க காரணமாக உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications