ஆந்திராவின் மிக அழகான கடற்கரையில் நண்பர்களுடன் ஜாலி சுற்றுலா.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
ஹைதராபாத்: நண்பர்கள் பலர் புத்தாண்டை கொண்டாட மலைப்பிரதேசங்கள் செல்வார்கள். சிலர் கடற்கரைகளுக்கு செல்வார்கள். ஆந்திராவை பொறுத்தவரை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட செல்வார்கள். புத்தாண்டின்போது சில கடற்கரையில் உற்சாகமாக கார்களில் பயணிப்பார்கள். அப்படி பயணிக்கும் போது கவனமாக பயணிக்க வேண்டும்.. ஜாலி டிரைவிங் இல்லாவிட்டால் நம்பவே முடியாத சிக்கலை ஏற்படுத்திவிடும்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அந்தர்வேதி அழகான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை கிராமம். இது கோதாவரி ஆறு வங்காள விரிகுடா கடலுடன் கலக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. கோதாவரி கடலில் கலக்கும் இடமான 'சங்கமம்' பகுதி மிகவும் அழகானது. ஆற்றின் நன்னீரும், கடலின் உப்பு நீரும் சேருவதை நீங்கள் தெளிவாகக் காண முடியும். இது புனிதமான இடமாகவும் கருதப்படுகிறது.

அந்தர்வேதியை பொறுத்தவரை லட்சுமி நரசிம்மர் கோவில் மிகவும் பிரபலம். கடற்கரைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள இந்தக் கோவில், தென்னிந்தியாவின் முக்கியமான நரசிம்மர் தலங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடற்கரையை பொறுத்தவரை மிகவும் அமைதியானது மற்றும் தூய்மையானது. அந்தர்வேதியை பொறுத்தவரை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மற்ற நகர கடற்கரைகளை விட குறைவாகவே இருக்கும், எனவே தனிமையை விரும்புவோருக்கு இது ஏற்ற இடமாக பார்க்கப்பபடுகிறது. இங்குள்ள கலங்கரை விளக்க மீது ஏறினால், கோதாவரி ஆறு கடலில் கலக்கும் முழு காட்சியையும் ரசிக்க முடியும். இங்கு புத்தாண்டை கொண்டாட இளைஞர்கள் வந்து செல்வார்கள். தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற இடம் என்பதால் பலர் அடிக்கடி வருவார்கள்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள இந்திர பாளையத்தை சேர்ந்த 35 வயதாகும் ஸ்ரீதர் தனது நண்பரான நந்தமூரி வெங்கட சாயிநாத கோபி கிருஷ்ணாவுடன் புத்தாண்டு விழாவை கொண்டாடுவதற்கு கடந்த மாதம் 31-ந் தேதி இரவு காரில் அந்தர்வேதி கடற்கரைக்கு சென்றுள்ளார். நள்ளிரவில் கோபி கிருஷ்ணா மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவரும் கடல் ஓரத்தில் ஜாலியாக காரை வேகமாக ஓட்டி மகிழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென இவர்களது கார் கடல் ஓரத்தில் இருந்த முகத்துவார பகுதிக்குள் பாய்ந்துவிட்டது. கடல் நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதை அறிந்து சுதாரித்து கொண்ட கோபி கிருஷ்ணா காரில் இருந்து வெளியேறி தப்பி விட்டார். ஆனால் காரை ஓட்டிச்சென்ற ஸ்ரீதர் வெளியேற முடியாத நிலையில் கார் கடலுக்குள் மூழ்கினார்கள். தகவல் அறிந்த மீட்பு படையினர் கடந்த 1-ந் தேதி பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கடலில் மூழ்கி உயிரிழந்த ஸ்ரீதரை காருடன் பிணமாக மீட்டனர். இதுபோன்ற முட்டாள்தனங்களை ஒரு நாளும் செய்யக்கூடாது. ஆபத்தையே தரும்.












Click it and Unblock the Notifications