சிங்கப்பூருக்கு சுற்றுலா போக ஆசைப்பட்ட கன்னியாகுமரிக்காரர்.. மாலத்தீவில் இருந்து வந்து.. பாவம் சார்
கன்னியாகுமரி: நம்ம ஊர் மக்களுக்கு சிங்கப்பூரின் பிரமமாண்டம் மிகவும் பிடிக்கும். சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்லவும், வேலைக்கு செல்லவும் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இங்கு நம்பகமான நிறுவனங்கள் மூலம் எளிதாக விசாவுக்கு விண்ணப்பித்து போய் வரமுடியும். ஆனால் சிலர் தனியார் நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாறுகிறார்கள். அப்படித்தான மாலத்தீவில் வேலை செய்யும் கன்னியாகுமரிக்காரர், குடும்பத்துடன்ர் சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்ல விரும்பி உள்ளார். ஆனால் அவர் ரூ.3.25 லட்சத்தை இழந்துள்ளார்.
சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்ல பல இந்தியர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டினர் பலர் சிங்கப்பூரின் புகழ்பெற்ற தளங்களான மெர்லியன், கார்டன்ஸ் பை தி பே மற்றும் மெரினா பே சாண்ட்ஸைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். அதேபோல் சிங்கப்பூரில் உள்ள சைனாடவுன், லிட்டில் இந்தியா, கம்போங் கிளாம் மற்றும் தியோங் பாரு போன்ற இடங்களுக்கு செல்லவும் விரும்புகிறார்கள். 4 முதல் ஐந்து நாட்கள் இருந்தால் சுற்றி பார்த்து வர முடியும். ஆனால் சிங்கப்பூரை சுற்றி பார்க்க ஆசைப்படுவோர் நம்பமாக சுற்றுலா நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். தவறான நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாறக்கூடாது. கன்னியாகுமரியில் ஒருவர் ஏமாந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே காஞ்சான்காடு முகிலன்கரை பகுதியைச் சேர்ந்த 40 வயதாகும் பிரவின் ஜோ என்பவர் மாலத்தீவில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜாய்ஸ் இவிலினுக்கு 31 வயது ஆகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரவின் ஜோஸ், அவரது மனைவி மற்றும் 4 உறவினர்கள் சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக திருவனந்தபுரம் தம்பானூரை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் முதல் தவணையாக ரூ.80 ஆயிரம், 2-வது தவணையாக ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 400 என மொத்தம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 400-ஐ கொடுத்துள்ளார்கள். இதற்காக வெளிநாட்டில் இருந்து கடந்த நவம்பர் மாதம் பிரவின் ஜோஸ் திருவனந்தபுரம் வந்தார்.
பின்னர் டிராவல்ஸ் நிறுவனத்திடம் வெளிநாடு பயணத்திட்டம் குறித்து கேட்ட போது, சரியான பதில் சொல்லாமல் ஏமாற்றி வந்தார்களாம். கடந்த ஓராண்டாக வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்யவில்லை, பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச்செல்வதாக கூறி பணமோசடி செய்ததாக உணர்ந்த ஜாய்ஸ் இவிலின், இதுகுறித்து திருவட்டார் போலீசில் டிராவல்ஸ் ஏஜென்சி மேலாளர் அகஸ்டின் தாஸ் உள்பட இருவர் மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்தநிலையில் நேற்று களியக்காவிளை பகுதியில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பெங்களூரு கந்தசாமி லே அவுட்டைசேர்ந்த அகஸ்டின் தாஸ் (47) என்பதும், பிரவின் ஜோஸ் குழுவினரை சுற்றுலா அழைத்துச்செல்வதாக கூறி பண மோசடி செய்து ஏமாற்றியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications