கொடைக்கானலில் பலரும் அறியாத சொர்க்கம்.. குவியும் சுற்றுலா பயணிகள்: புதுசாக பிளான் பண்றீங்களா?
கொடைக்கானல்: அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி, கொடைக்கானலுக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்னும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை என்பதால் பலரும் கொடைக்கானலுக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். அப்படி நீங்கள் கொடைக்கானல் செல்ல திட்டமிட்டால், இந்த இடங்களை எல்லாம் தவறவிட வேண்டாம்.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை பொதுவாகவே அதிகமாக இருக்கும். இப்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் நேற்று பிற்பகல் முதல் வருகை அதிகமாக இருந்ததை காண முடிந்தது. கொடைக்கானலில் நேற்று வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பில்லர் ராக், குணாகுகை, பைன் மரசோலை, பேரிஜம்ஏரி அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களில் அடர்ந்த பனி மூட்டம், மிதமான வெப்பம், கடும் குளிர் எனமூன்று காலநிலையையும் அனுபவிக்க முடிந்தது. அதேபோல் மலை முகடுகள் மீது தவழ்ந்து சென்ற மேகக்கூட்டம் சுற்றுலா பயணிகளை மெய்சிலிர்க்க வைத்தது.

நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் பலர், குடும்பத்துடன் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லும் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. புத்தாண்டு பிறப்பையொட்டி இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என தெரிகிறது..
கொடைக்கானலுக்கு புதிதாக சுற்றுலா செல்ல பிளான் போடுறீங்க அப்படீன்னா..இந்த முறைஉங்கள் ட்ரிப்பில் தவிர்க்க கூடாத இடங்களை பாருங்கள்.. கொடைக்கானலில் பலரும் பூம்பாறையுடன் கிளம்பி வந்துவிடுவார்கள். மன்னவனூர்தாண்டி, கிளாவரை வரை சென்று பாருங்கள் மிகவும் அருமையான காலநிலையை உணருவீர்கள்.. அங்கிருந்து சிறிது தூரத்திலேயே கேரள தமிழ்நாடு செக் போஸ்ட் இருக்கும்..
அதேபோல் ஐந்து வீடு அருவி கொடைக்கானலில் பலருக்கும் தெரிந்த இடம் தான். ஆனால் ஆபத்தான அருவி.. இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம்.. ஏனெனில் சற்று தவறி விழுந்தாலும் உங்கள் சொந்தங்களை தவறவிட்டுவிடுவீர்கள்.. கொடைக்கானலில் வெள்ளகவி கிராமத்திற்கு செல்லலாம்..
அங்கு கிளைமேட் மிக அருமையாக இருக்கும். டிரக்கிங் பிரியர்களின் சொர்க்க புரி.. இந்த மாதம் சென்று பாருங்கள். ஒரு நாள் இரவு அங்கு தங்கினால் வித்தியாசமான வாழ்க்கையை உணருவீர்கள்..அதேபோல் பேரிஜம் ஏரிக்கு டிக்கெட் எடுத்து போய்விடுங்கள். அந்த இடம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.. வழக்கமான இடங்களை மிஸ் பண்ணாத அதேநேரம்..இந்த முறை அடுக்கம் கிராமத்தின் வழியாக கும்பக்கரை சென்று வரலாம். அந்த பாதை மிகவும் திரில்லானது. நன்கு வாகனம் ஓட்டத்தெரிந்தவர்களுக்கு மட்டுமே அந்த சாலை சிறப்பானது. மாலையில் அந்தசாலையில் செல்லக்கூடாது.
அதேபோல் கொடைக்கானலுக்கு வரும்போதே பண்ணைக்காடு, தாண்டிக்குடி வழியாகவும் வரலாம். அந்த பகுதியில் பல நல்ல வியூ பாயிண்டுகள் உள்ளன. பழனி வழியாக வந்தால் அந்த பயணமும் திரில்லாகவே இருக்கும். ஏனெனில் வத்தலக்குண்டு பாதையை விட இந்தப் பாதை சற்று செங்குத்தானது மற்றும் அதிக கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது.
பழனியிலிருந்து கிளம்பிய சுமார் 7 கி.மீ தூரத்தில் வரதமாநதி அணை அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் உள்ள இந்த இடம் அமைதியான சூழலுக்கும், புகைப்படம் எடுப்பதற்கும் ஏற்றதாக இருக்கும். அடுத்ததாக பாலாறு அணை காட்சிமுனை சுமார் 15 கி.மீ பயணத்திற்குப் பிறகு, 2-வது கொண்டை ஊசி வளைவில் வரும். இங்கிருந்து பாலாறு அணையின் முழு அழகையும், மலைகளுக்கு இடையே தேங்கியிருக்கும் நீரையும் ரசிக்கலாம்.
அதேபோல் பழனி நகர காட்சிமுனை சுமார் 39-40 கி.மீ உயரத்தில் அமைந்துள்ளது. அங்கிருந்து கீழே உள்ள பழனி நகரம் மற்றும் புகழ்பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோவிலை ரசிக்கலாம். பழனி பாதையை பொறுத்தவரை பகலில் செல்வதே நல்லது. இந்தப் பாதையில் சுமார் 14 முதல் 20 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கும். நன்கு அனுபவம் உள்ள ஓட்டுநர்களே இந்த பாதையில் மிக கவனமாக செல்ல வேண்டியதிருக்கும். எனவே கவனமாக பயணியுங்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications