Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானல் போனால் போக வேண்டிய சொர்க்கம்.. கும்பக்கரை செல்லும் வழியில் பலருக்கும் தெரியாத கிராமம்

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: பொங்கல் பண்டிகை விடுமுறையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் சுற்றுலா செல்வது வழக்கம், இன்று வியாழக்கிழமை, நாளை வெள்ளி, அடுத்து சனி மற்றும் ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை இருக்கிறது. விடுமுறையை கொண்டாட கொடைக்கானல் போகிற பலர், புதிய இடங்களை தேடுவார்கள். கொடைக்கானலில் டிரக்கிங் சென்று தங்க விரும்புவோர், வட்டக்கானல் தாண்டி வெள்ளகவி கிராமத்திற்கு போகலாம். அதை பற்றி பார்ப்போம்.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை பொங்கல் பண்டிகையும், புதன்கிழமை மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது, எல்லா கிராமங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மிகவும் உற்சாகமாக போட்டிகளில், களை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் பொங்கல் விழாவை சிறப்பித்தனர். இந்நிலையில் இன்று காணும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் என்பது உறவினர்களை காண்பது, விரும்பிய இடங்களுக்கு செல்வது தான் பிரதானம் ஆகும். பலரும் இன்று தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று ரசித்து வருகிறார்கள். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பலரும் சென்றுள்ளார். இன்றும், நாளையும் பலர் கொடைக்கானலுக்கு செல்ல ஆர்வமாக உள்ளார்கள்.

kodaikanal vellagavi

கொடைக்கானலை பொறுத்தவரை இந்திய அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக இருக்கிறது. ஏராளமான வெளிநாட்டு பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் இருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மிகவும் விருப்பமான சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. கொடைக்கானலில் ஒவ்வொரு பண்டிகையின் போதும், விடுமுறை காலத்தின் போதும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட மக்கள் செல்வார்கள். கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. நட்சத்திர ஏரியும், பேரிஜம் ஏரியும் கொடைக்கானல் செல்பவர்கள் கண்டு ரசிக்கும் பிரசித்தி பெற்ற இடமாக உள்ளது. பிரைண்ட் பூங்கா, வெள்ள நீர் வீழ்ச்சி, பூம்பாறை முருகன் கோவில், கூக்கால் நீர் வீழ்ச்சி,புலிவால் அருவி, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, தொப்பை தூக்கி பாறை, பசுமை பள்ளதாக்கு, கோக்கர்ஸ்வாக், குணா குகை, மாதா கோவில், குறிஞ்சி ஆண்டவர் கோவில் என ஏராளமான இடங்களை சொல்லிக் கொண்டே போகலாம். கொடைக்கானல் செல்வோர் டிரக்கிங் செல்ல ஆர்வம் காட்டுவார்கள். அப்படி டிரக்கிங் செல்ல விரும்புவோர் கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளகவி கிராமத்திற்கு போகலாம்.

kodaikanal vellagavi

வெள்ளகவிக்கு எப்படி செல்வது: கொடைக்கானல் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்த வட்டக்கானலுக்கு ஜீப்பில் அல்லது காரில் போகலாம். அங்கிருந்து மலையில் இறங்கும் பாதையில் நடந்து செல்ல வேண்டும். இப்போது தை மாதம் என்பதால் பசுமை நிறைந்த காடுகள் பனிமூட்டத்தையே வெள்ளை உடை போர்த்தி இருக்கும்.. பாதையை கடந்து செல்ல செல்ல வெள்ளை உடையான பனிமூட்டம் விலகிக் கொண்ட இருக்கும்.. உங்கள் கண்கள் பசுமையான மலைகளையும், மேகங்களையும் பார்த்து மெய்சிலிர்க்கும்.

வெள்ளகவிக்கு போக விரும்புவோர் வட்டக்கானல் போகும் முன்பே, கொடைக்கானல் பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் உங்களுக்கு வேண்டிய உணவு, தண்ணீர் உள்பட அனைத்தையும் வாங்கிவிடுங்கள். ஏனெனில் வட்டக்கானலில் பெரிய அளவில் உணவகங்கள் இருக்காது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் பயணித்தால் தான் வட்டக்கானல் அங்கிருந்து கீழ்நோக்கி இன்னொரு 6 கிலோ மீட்டர் நடந்து சென்றால் தான் வெள்ளகவி கிராமத்தின் அழகை ரசிக்க முடியும்.

kodaikanal vellagavi

தற்போதைய நிலையில் வட்டகானல் போகும் வழியில் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எனவே அதற்கும் தயராகவே காலை நேரத்திலேயே செல்லுங்கள். நீங்கள் டால்பின்னோஸை தாண்டும் போதே நீங்கள் வெள்ளகவி ஊராட்சி என்ற போர்டை காணலாம். டால்பின் நோஸ் இல் இருந்த ஐந்து நிமிடம் நடந்தால் மிகச்சிறந்த வியூ பாய்ண்ட்டை பார்க்கலாம். அதை பார்த்துவிட்டு நடந்து சென்றால் அங்கு ஒரு பைப் வெள்ளகவி நோக்கி போகும். அந்த பைப் வழியாக நடந்து சென்றால் நேராக வெள்ளகவி கிராமத்தை அடைந்து விடலாம். அதேநேரம் இரவு தங்க வேண்டும் என்றால், அதற்கு தங்குவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கு தனியார் நிறுவனங்கள் வசதி செய்து தருகின்ற. அங்கு சென்று இரவு முழுவதும் தங்க முடியும். சாப்பாடு மற்றும் தங்கும் வசதிகள் செய்து தருகிறார்கள்.

வெள்ளகவி கிராமம் சுமார் 400 வருடம் முன்பே உருவான கிராமம் ஆகும். வெள்ளகவி வழியாகவே கொடைக்கானலுக்கு வெள்ளைக்காரர்கள் அந்த காலத்தில் போயிருக்கிறார்கள் என்பது தான் வரலாறு. இந்த கிராம மக்கள் பயணத்திற்கு இப்போது குதிரை தான் ஒரே போக்குவரத்தாக உள்ளது . அதில் தான் வேண்டிய பொருட்களை கொடைக்கானல் கொண்டு வந்து செல்கிறர்கள்.

kodaikanal vellagavi

வெள்ளக்கவி கிராமத்திற்கு கொடைக்கானல் வட்டக்கானலில் இருந்து மட்டுமின்றி, கும்பக்கரை அருவி வழியாகவும் வழிகள் உள்ளது.. அதாவது, வெள்ளகவியில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கும் போக முடியும். ஆனால் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து கும்பக்கரை அருவிக்கு வர வேண்டும். அங்கிருந்து நீங்கள் 7 கிலோ மீட்டர் தூரம் வாகனங்களில் பயணித்தால் தேனி மாவட்டம் பெரிய குளத்தை அடைய முடியும். ஆனால் இந்த வழியாக வருவதற்கு தடை உள்ளது. ஏனெனில் வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் வனத்துறை அலுவலகங்களில் அனுமதி இல்லாமல் போக முடியாது. வெள்ளகவி கிராமத்தில் இருந்து தேனி மாவட்டத்தின் அழகை முழுமையாக ரசிக்கலாம். வெள்ளகவி சென்றுவந்த அனுபவத்தை கமெண்ட்டில் பகிருங்கள்

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+