Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடவுள் தேசத்தின் கனவுலகம்.. உடுமலைப்பேட்டை டூ மூணாறு போறீங்களா.. மறையூரில் மறைந்திருக்கும் வில்லன்

Subscribe to Oneindia Tamil

மூணாறு: கடவுள் தேசத்தின் கனவுலகம் என்றால் அது இடுக்கி தான். இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, தேக்கடி, வாகமன், மறையூர், சின்னார் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். கோவை திருப்பூர் வழியாக வருவோர், உடுமலைப்பேட்டை வழியாக மறையூரில் ஏறி மூணாறு வருகிறார். மறையூரில் விரிக்கொம்பன் யானையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. விரிக்கொம்பன் ரொம்ப உக்கிரமானவன் என்பதால் இருசக்கர வாகனங்களில், கார்களில் வருவோர் கவனமாக வருவது நல்லது.

கடவுளின் தேசமான கேரளாவில் இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா, கொல்லம், வயநாடு, திருச்சூர், பாலக்காடு, வயநாடு போன்ற மாவட்டங்களை மலைப்பபகுதிகளை கொண்ட மாவட்டங்கள் ஆகும். இதில் இடுக்கி மாவட்டமும், வயநாடு மாவட்டமும் முற்றிலும் மலைப்பகுதியில் உள்ள மாவட்டம் ஆகும்.

A wild elephant blocked the way of vehicles on the Maraiyur-Udumalaipet road

இடுக்கி மாவட்டம்

இதில் முக்கிய மலைப்பிரதேசமாக இடுக்கி மாவட்டம் திகழ்கிறது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் மலைத்தொடர்களும், பச்சை பசேலென காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்களும் ஏராளமாக இருக்கின்றன. கண்களுக்கு விருத்தளிக்கும் வகையில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள், நீர்வீழ்ச்சிகள், தண்ணீர் ததும்பி நிற்கும் அணைகள் அதிகமாக இருக்கின்றன. வாழ்ந்தால் இடுக்கியில் வாழ வேண்டும் என்று ஏங்க வைக்கும் காடுகளும், கிளைமேட்டும் இருக்கும். சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த ஊராக இடுக்கி மாவட்டம் இருக்கிறது.

வாகமன் மூணாறு

இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, தேக்கடி, வாகமன், மறையூர், சின்னார், கொழுக்குமலை, டாப் ஸ்டேசன், மாட்டுப்பட்டி அணை உள்பட சிறந்த சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. இவற்றை கண்டுகளிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது வருகை தருகின்றனர். மிகவும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ள இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, மான், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.

மூணாறு முதல் மறையூர் வரை

இடுக்கி மாவட்டத்தை பொறுத்தவரை மூணாறு முதல் மறையூர் வழியாக உடுமலைப்பேட்டை வழியாக செல்லும் சாலைகள் யானைகளின் அச்சுறுத்தல், புலிகளின் அச்சுறுத்தல் உள்ள வனப்பகுதியாகும். இரவில் இந்த சாலையில் வருவது மிகவும் சிக்கலானது. பகலிலேயே வனவிலங்குகள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக இருக்கும். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் சுற்றுலா பயணிகளுக்கும், குடியிருப்புவாசிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இன்று வரை இருக்கின்றன. தற்போது குறிப்பாக காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

விரிக்கொம்பன்

மறையூர் பகுதியில் 'விரிக்கொம்பன்' என்ற காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. மறையூரில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் ஒற்றை காட்டு யானையின் தந்தங்கள் இரண்டும், மாட்டிற்கு கொம்புகள் விரிந்து இருக்கும். இதனால் 'விரிக்கொம்பன்' யானை என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. மறையூர் அருகே சின்னார் வனவிலங்கு சரணாலயத்தின் தான் விரிக்கொம்பன் வசித்து வருகிறது. இந்த யானை சின்னார், மறையூரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் அவ்வப்போது புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

A wild elephant blocked the way of vehicles on the Maraiyur-Udumalaipet road

அந்த சாலையில் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த நிலையில, நடுரோட்டில் நடந்து வந்த காட்டு யானை அவர்களை அச்சுறுத்தியது. இதனால் யானையை கண்டதும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக சாலையில் அட்டகாசம் செய்த யானை பின்னர் அங்கிருந்து சென்றது. காட்டு யானை நடமாட்டம் இருப்பதால் உடுமலை மறையூர் சாலையில் கவனமாக செல்வது நல்லது. இருசக்கர வாகன ஓட்டிகள் மாலை நேரங்களில் அந்த சாலையில் பயணிக்காமல் இருப்பது நல்லது என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+