ஊட்டி "விருந்தாளி" உங்களுக்காக காத்திருக்கிறார் மக்களே.. உடனே நீலகிரி கிளம்புங்க.. அட, கொத்து கொத்தா
ஊட்டி : விரைவில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து ஒரு மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நீலகிரியை பொறுத்தவரை, ஆங்கிலேயரின் வருகைக்கு பிறகுதான் வகைவகையான தாவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன... இவைகளில் பல தாவரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடியவை. பல தாவரங்கள் பணப்பயிர்களாக திகழக்கூடியவை.

அவர்களது ஆட்சிக்காலத்தில்தான், வெளிநாட்டில் இருந்து பல்வேறு மலர்ச்செடிகள் கொண்டுவரப்பட்டு, நடவுசெய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. அவற்றில் ஒரு சில மலர்ச்செடிகள் இப்போது பெரியளவில் வளர்ந்து மரங்களாக காட்சி அளித்து வருகின்றன.
ரெட்லீப் பூக்கள்: இதில் ஒன்றுதான் ரெட்லீப் மலர்கள் ஆகும்.. இந்த செடியை, ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வந்தார்களாம்.. அந்த காலத்தில் இதை நடவு செய்யப்பட்ட நிலையில், நீலகிரியில் உள்ள பெரிய பெரிய பங்களாக்களிலும், தேயிலை தோட்டங்களிலும், சாலையோர பகுதிகளிலும், ஓங்கி வளர்ந்து காணப்படுகின்றன இந்த ரெட்லீப் பூக்கள்.
முக்கியமாக, மஞ்சூர் உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளிலும், ரெட்லீப் பூக்கள் நிறைய காணப்படும். நிறம் மாறும் தன்மை கொண்ட ரெட்லீப் மலர்கள் ஏராளமாக பூத்துள்ளது. ஊட்டி
இலைகள்: கண்களை கவரும் மெருன் மற்றும் சிவப்பு நிறங்களில் செடிகளின் இலைகளே பூக்களாய் காட்சி தருவது இதன் சிறப்பாகும்.. இதன் இலைகள் ஆரம்பத்தில் பச்சை கலராக இருக்கும்.. அதன்பிறகு, பழுப்பு நிறமாகவும், அதன்பிறகு மஞ்சள் கலராகவும், பிறகு மெருன் கலராக மாறி, கடைசியில் ரெட் கலருக்கு வந்துவிடும்.
கிட்டத்தட்ட பிரவுன் கலர் என்றே சொல்லலாம்.. இந்த ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த பூக்களுக்கு நிறைய அபிமானர்கள் உண்டு.. காலநிலைக்கு ஏற்றார்போல நிறம் மாறக்கூடியது.. டக் டக்கென கலர்கள் ஒவ்வொன்றாக மாறுவதால்தான், இந்த பூக்களுக்கு, "நிறம் மாறும் பூக்கள்" என்று அழைக்கின்றனர். அதேபோல, ரெட்லீப் செடிகளுக்கு விதைகள் கிடையாது.. பதியம் போடும் முறையில் மட்டுமே இதனை வளர்க்க முடியும்.
வண்ண மலர்கள்: பூத்துக்குலுங்கும் இந்த ரெட்லீப் பூக்கள், பார்வையாளர்களின் கண்களுக்கு எப்போதுமே விருந்தாக அமைந்துவிடும். சாலையோரங்களில் வண்ண வண்ணமாக ஜொலிக்கும் இந்த பூக்களின் முன்பாக நின்று, சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்காமல் செல்வது கிடையாது. அந்த அளவுக்கு கவர்ச்சியை தரக்கூடியது இந்த ரெட்லீப் பூக்கள்.
இதோ கோடை காலம் தொடங்கிவிட்டது.. ஊட்டியில் ரெட்லீப் பூக்கள் தொடங்கிவிட்டன.. சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்க இந்த "சிவப்பு கலர் விருந்தாளி" காத்திருக்கிறார்.. கொத்து கொத்தாக பூத்திருக்கிறார்..!!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications