Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிபொலி..இனி டூரிஸ்ட் ஸ்பாட்லயே சரக்கு! சுற்றுலாப் பயணிகளை வளைக்கும் சேட்டன்ஸ்! கள்ளும் இனி கலக்கும்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிய மதுபான கொள்கையின்படி சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் சுற்றுலா தளங்களில் ஹோட்டல்களில் பீர் மற்றும் ஒயின் விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பத்து மாதங்களுக்கு முன்பே இந்த திட்டம் முன்மொழியப்பட்ட நிலையில் தற்போது அமலுக்கு வந்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளாவுக்கு ஆண்டுதோறும் இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுமார் 3,00 கோடி ரூபாய் அளவுக்கு அங்கு நேரடியாக சுற்றுலா பயணிகள் மூலம் வருவாய் கிடைக்கிறது.

Beer and wine allowed to be sold in hotels at tourist sites in Kerala

இது மட்டும் இல்லாமல் போக்குவரத்து, ஹோட்டல் உள்ளிட்ட வகைகளில் மறைமுகமாக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக தகவல் தெரிவிக்கிறது. திருவனந்தபுரம், கொச்சின், பத்மநாபபுரம் சபரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் படை எடுக்கின்றனர்.

கேரளா சுற்றுலா: மனதை மயக்கும் சுற்றுச்சூழல், மூலிகை வாசம் தரும் வனப்பகுதிகள், கடற்கரைகள், படகு வீடு என கேரளா கடவுளின் தேசம் என்பதற்கான அனைத்து தகுதிகளையும் தன்னகத்தே கொண்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கேரளாவின் உணவு வகைகளை சுவைப்பதற்கென்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுக்கின்றனர். அது மட்டுமல்லாமல் கேரளாவில் குறைந்த விலையில் மதுபானங்கள் கிடைக்கும்.

சுற்றுலா பயணிகள்: இதுவே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அங்கு செல்வதற்கு காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கள்ளும் கேரளாவின் முக்கிய உணவு பொருளாக இருக்கிறது. அங்கு சாதாரண கடைகளிலே கள் மற்றும் மாட்டுக்கறி, மீன் உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை வாங்கி சுவைக்க முடியும். இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து தினமும் கூட இளைஞர்கள் கேரளாவுக்கு சென்று வருவது வழக்கமாகவே இருக்கிறது.

Beer and wine allowed to be sold in hotels at tourist sites in Kerala

புதிய மதுபான கொள்கை: இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய மதுபான கொள்கையை கேரளா அறிவித்திருக்கிறது. 2023-24 மதுபான கொள்கையின் படி கேரளா முழுவதும் இருக்கும் சுற்றுலா தலங்களில் உள்ள உணவகங்களில் தற்போது பீர் மற்றும் ஒயின் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்கள் முன்னதாகவே இந்த திட்டம் முன்மொழியப்பட்ட நிலையில் தற்போது இது அமல்படுத்தப்பட்டுள்ளதால் கேரளாவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உணவகங்களில் பீர்: கேரள அரசின் இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, சுற்றுலா தலங்களில் அமைந்துள்ள உணவகங்கள் பீர் மற்றும் ஒயின் வழங்க மூன்று மாத உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த உரிமத்திற்கான கட்டணம் ரூ. 1 லட்சம் எனவும், விண்ணப்பங்கள் விரைவில் ஆன்லைனில் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த ஏற்பாடு, சுற்றுலா சீசன்களுடன் தங்கள் உரிமங்களை சீரமைக்க நிறுவனங்களை அனுமதிக்கிறது. ஏனெனில் ஒரு வருட கால உரிமத்தைப் பெறுவது முதலீட்டாளர்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் 3 மாதங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

Beer and wine allowed to be sold in hotels at tourist sites in Kerala

சிறப்பு ஏற்பாடு: கடந்த காலங்களில் கேரளாவில் சுற்றுலாப் பகுதிகளில் உள்ள பல உணவகங்கள் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டன. இதை தடுக்க, கலால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தியதால், சுற்றுலா பயணிகளுக்கு அடிக்கடி இடையூறு ஏற்பட்டது. இதனால் அவர்களின் வருகை குறைந்தது. இந்நிலையில் புதிய விதிமுறைகள் இந்த சட்டவிரோத நடவடிக்கையை கணிசமாகக் கட்டுப்படுத்துவதோடு, அரசுக்கும் வருவாய் ஈட்டித் தரும் என்கின்றனர் அதிகாரிகள்.

Beer and wine allowed to be sold in hotels at tourist sites in Kerala

கள் விற்க அனுமதி: இதுமட்டுமல்லாமல் சுற்றுலா தலங்களில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் தங்கள் வளாகத்தில் "கேரளா கள்" என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு பரிமாற இந்த மதுபான கொள்கை வழிவகுக்கிறது. கலால் துறையில் பதிவு செய்யப்பட்ட இடங்களில் உள்ள தென்னை மரங்களில் இருந்து கள்ளை இறக்கி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கலாம். அதே நேரத்தில் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் கள் விற்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+