இந்த அழகை ஏன் ஒளிச்சி வெச்சுருக்காங்க? சென்னை அருகே குட்டி கேரளா.. ஞாயிறு விடுமுறைக்கு சூப்பரான இடம்
சென்னை: வார விடுமுறையை சென்னையில் பீச், பார்க், மால், திரையரங்கம் என ஒரே மாதிரி கழித்துபோர் அடித்துப்போனவர்களுக்கு சூப்பரான சுற்றுலா தலம் வெறும் 70 கிமீ தொலைவிலேயே அமைந்து உள்ளது? அப்படி என்ன பகுதி என்று விரிவாக பார்ப்போம்.
வேலை, டார்கெட், டிராபிக் என எப்போதும் பரபரப்புடனே நாட்களை கழித்துவந்த சென்னை சிட்டி மக்களுக்கு கூடுதல் டென்சனை கொடுக்க தொடங்கி இருக்கிறது தற்போதைய வானிலை. மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வெயிலை எதிர்பார்த்தவர்கள், இவ்வளவு வெயில் வேண்டாமே என்று கெஞ்சும் அளவுக்கு வெப்ப நிலை கோடைக்கு முன்னரே அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. டிரைலரே இப்படி என்றால் மெயின் பிக்சர் எப்படி இருக்கும் என்ற அச்சத்துடன் கோடையை எதிர்நோக்கி உள்ளார்கள் சென்னை மக்கள்.

இப்படிப்பட்டவர்கள் வார விடுமுறைகளை அதே சென்னை டிராபிக் பரபரப்புக்குள் கழிக்காமல் சென்னையை விட்டு வெளியில் சென்று இயற்கை சூழலும் கழிக்க விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அளவு எடுத்து செய்ததுபோன்ற இடம் சென்னையில் இருந்து சில மணி நேர பயண தூரத்திலேயே உள்ளது. நாம் இப்போது சொல்லப்போகும் இடம் சென்னையைவிட்டு மட்டும் வெளியில் இல்லை.. தமிழ்நாட்டை விட்டே வெளியில் அமைந்து இருக்கிறது. ஆம், அக்கட தேசமான ஆந்திராவுக்குதான் நாம் உங்களை அழைத்து செல்கிறோம்.

என்ன பில்டப் ஓவரா இருக்கே.. அப்படி என்ன இடம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் நாகலாபுரம். தமிழ்நாடு எல்லையை ஒட்டி அமைந்து உள்ள ஆந்திர பிரதேசத்தின் அழகிய பகுதி இது. கையில் ஒரு நாள் விடுமுறை இருக்கிறது.. எங்காவது ஜாலியாக போயிட்டு வரலாமே என்று நினைப்பவர்கள் இங்கு தாராளமாக சுற்றிப்பார்த்துவிட்டு வரலாம். அப்படிப்பட்ட இடம்தான் நாகலாபுரம். கடுமையாக தலைவலியில் இருப்பவர்களுக்கு தைலம் தேய்த்து மசாஜ் செய்தால் எப்படி சுகமாக இருக்குமோ அதேபோன்று நகர பரபரப்பில் இருக்கும் உங்கள் மனதை மசாஜ் செய்ததை போன்ற உணர்வை இங்குள்ள இயற்கை சூழல் உங்களுக்கு வழங்கும்.

சொந்த வாகனத்தில் புறப்பட்டால் வெறும் ஒன்றரை மணி நேரத்தில் நாகலாபுரத்துக்கு சென்று வரலாம். மலை பகுதிகளுக்கே அடையாளமாக இருக்கும் வானுயர்ந்த பழங்கால மரங்கள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், சிற்றருவிகள், வித்தியாசமான பறவைகள், விலங்குகள் என திரும்பும் திசையெல்லாம் இப்பகுதியின் இயற்கை உங்களை கட்டிப்போட்டுவிடும். நாகலாபுரத்தில் 3 நீர்வீழ்ச்சிகள் அமைந்து உள்ளன. தலையில் கொட்டும் தண்ணீர் உங்கள் கவலை, டென்சன் என எல்லாவற்றை கரைத்து சென்றுவிடும்.

நாகலாபுரத்திற்கு அருகே பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்றவை இல்லாததால் சொந்த வாகனமே சிறந்த தேர்வாக இருக்கும். முதல் செக் போஸ்டில் ரூ.20 நுழைவுக் கட்டணம் செலுத்தி பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஒன்றைரை கிலோ மீட்டர் தொலைவில் முதல் நீர்வீழ்ச்சி வரும். அங்கிருந்து நடக்க தொடங்கினால் வரிசையாக ஒவ்வொரு நீர் வீழ்ச்சியாக சென்று குளித்து மகிழ்ந்துவிட்டு வரலாம். ஒவ்வொரு நீர் வீழ்ச்சிக்கும் 30 நிமிடங்கள் வரை நடக்க வேண்டி இருக்கும். நீர் வீழ்ச்சி குளியல், மலையேற்ற அனுபவம் என எல்லாம் உங்களை கட்டிப்போட்டுவிடும்.

முழு நாளையும் அங்கேயே கழித்துவிட்டு இருட்டுவதற்கு முன்பே நீங்கள் கிளம்பினால் இரவு சென்னைக்கு வந்துவிடலாம். 2018 ஆம் ஆண்டு பாதுகாப்பு குறைபாடு காரணமாக மூடப்பட்ட இந்த நாகலாபுரம் நீர்வீழ்ச்சி கடந்த 2022 ஆம் ஆண்டு முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறக்கப்பட்டு உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிக்கு தினசரி ஏராளமான மக்கள் வருகை தருவதால் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications