ரியல் சொர்க்கவாசலான போடிமெட்டு.. கடவுள் தேசத்தின் கனவு பாதையில் கனவில் கூட நினைக்காத ட்விஸ்ட்
தேனி: தமிழக - கேரள எல்லையை இணைக்கும் சொர்க்கவாசல் என்று அழைக்கப்படும் போடிமெட்டு மலைப்பாதை, தற்போது நிலவி வரும் அடர் பனிமூட்டத்தால் ஒரு வெள்ளை நிறக் கனவுலகம் போல காட்சியளிக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,200 மீட்டர் (சுமார் 4,000 அடி) உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில், நிலவும் தட்பவெப்ப மாறுபாடுகளால் பகல் நேரமே இரவு போல இருண்டு காணப்படுகிறது. எதிரே வரும் வாகனங்கள் எதுவும் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்
தேனியிலிருந்து சர்வதேச சுற்றுலாத் தலமான மூணாறுக்குச் செல்லும் முக்கிய வழித்தடத்தில் போடி மெட்டு அமைந்துள்ளது. 17 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளுடன் காணப்படும் போடி மெட்டு மலைப்பாதை பனிப்போர்வையால் முழுமையாக மூடப்பட்டிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான சிகரங்களுக்கு இடையே போடி மெட்டு சாலை அமைந்துள்ளதால், அரபிக் கடலில் இருந்து வீசும் ஈரப்பதம் மிக்க காற்று மலைமுகடுகளில் மோதி, சட்டென குளிர்ந்து மேகக்கூட்டங்களாக மாறுகிறது. இதுவே இப்பகுதியில் மற்ற இடங்களை விட பனிமூட்டம் அதிகமாக இருக்க காரணமாக பார்க்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மெல்லிய சாரல் மழையைத் தொடர்ந்து, நேற்று காலை வரை மலைப்பாதை முழுவதையும் அடர்ந்த பனி ஆக்கிரமித்தது. எதிரே வரும் வாகனங்கள் சில அடி தூரத்தில் கூடத் தெரியாத அளவிற்குப் பனி சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் மெதுவாகச் சென்றனர். கடும் குளிராலும், பனியாலும் முந்தல், குரங்கணி மற்றும் போடிமெட்டு கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஏலக்காய், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பனிப்புகைக்கு நடுவே ஊர்ந்து சென்றன.
தொடர் மழை மற்றும் பனி காரணமாகச் சாலைகளில் ஈரப்பதம் அதிகரித்து வழுக்கும் தன்மை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரம் ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து, ஆங்காங்கே சிறிய கல் சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வளைவுகளில் முந்திச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒலியை எழுப்பியபடி, மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என போக்குவரத்துப் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது போடிமெட்டு மலைப்பாதையில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, பொங்கலுக்கு மூணாறு சுற்றுலா செல்வோர் சில பாதுகாப்பு வழிமுறைகளை அவசியம் பின்பற்றினால் மிகவும் நல்லது. மலைப்பாதையில் பனிமூட்டம் பகலிலேயே அடர்த்தியாக இருப்பதால், மாலை 5 மணிக்கு மேல் அல்லது அதிகாலை நேரங்களில் பயணத்தைத் தவிர்க்கவும். இரவு நேரப் பயணம் மிகவும் அபாயகரமானதாக பார்க்கப்படுகிறது. உங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை மற்றும் பனி விளக்குகளை (Fog lights) கண்டிப்பாக எரிய விடவும். எதிரே வரும் வாகனங்களுக்கு உங்கள் இருப்பிடத்தை உணர்த்த இதுவே ஒரே வழியாகும்.
கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பும்போது வேகம் மிகக் குறைவாக இருக்கட்டும். சாலைகளில் ஈரப்பதம் இருப்பதால் டயர்கள் வழுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே திடீர் பிரேக் போடுவதைத் தவிர்த்துவிடுங்கள்.. அதேபோல் சமீபத்திய மழையால் மலைச்சரிவுகளில் மண் எப்போது வேண்டுமானாலும் சரிந்துவிழும் அபாயத்துடன் மென்மையாக இருக்கும். எனவே, சாலையோரங்களில் அல்லது சரிவான பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
அதேபோல் குறுகிய வளைவுகளில் மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முயற்சிப்பது விபத்திற்கு வழிவகுக்கும். பொறுமை மிக அவசியம் ஆகும். மலைப்பாதையில் சில இடங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காமல் போய்விடும் வாய்ப்பு அதிகம் எனவே, கிளம்பும் முன்பே உங்கள் இருப்பிடத்தை உறவினர்களுக்குத் தெரிவிப்பது நல்லது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications