செங்கல்பட்டு விஏஓ ஒகேனக்கல் அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றது. இங்கு தற்போது தண்ணீர் வரத்து அருமையாக உள்ளது.இதன் காரணமாக கோடைவிடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.. அப்படித்தான் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் முருகேசன் என்பவர் வந்தார். சுற்றுலா வந்த இடத்தில் கற்பனையிலும் நினைக்காத சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று ஒகேனக்கல். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ளது. பெங்களூர், சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட அருகில் உள்ள பகுதி மக்களுக்கு மிகவும் பிடித்த சுற்றுலா தலமாக ஒகேனக்கல் திகழ்கிறது. கோடை விடுமுறை காரணமாக அண்டை மாவட்ட மக்கள் மட்டுமின்றி, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது வந்து கொண்டிருக்கிறார்கள். து கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

ஒகேனக்கல் அருவியில் நீர் வரத்து தற்போது அருமையாக உள்ளதால் பரிசல் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள், ஆயில் மசாஜ் செய்து, பிரதான நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்கிறார்கள். அப்படித்தான் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த விஏஓ ஒருவர் சுற்றுலா வந்துள்ளார். அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
செங்கல்பட்டு மாவட்டம் பாப்பாக்கம் செல்வி நகரை சேர்ந்த 55 வயதாகும் முருகேசன் என்பவர் திருக்கழுகுன்றம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று இவர், தன்னுடன் பணியாற்றும் 4 ஊழியர்களுடன் காரில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்திருக்கிறார். ஒகேனக்கல்லில் மெயின் அருவி, தொங்கு பாலம், முதலை பண்ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களை அவர்கள் சுற்றி பார்த்தனர். பின்னர் முருகேசன் தன்னுடன் வந்த ஊழியர்களுடன் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.
காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது முருகேசன் ஆழமான பகுதிக்கு சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவருடன் வந்தவர்கள் முருகேசனை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. பின்னர் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
அதன்போில் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகேசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அவர்கள், நீரில் மூழ்கி இறந்த கிராம நிர்வாக அலுவலர் முருகேசனின் உடலை மீட்டார்கள். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த கிராம நிர்வாக அலுவலர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒகேனக்கல் சுற்றுலா வருவோர் ஆழமான பகுதிக்கு செல்லவே கூடாது. நீச்சல் தெரியாதவர்கள் ஆழமான பகுதியில் நண்பர்களுடன் விளையாட்டுத்தனமாக கூட குளிக்க போக வேண்டும்.. அப்படி விளையாட்டுத்தனமாக ஜாலிக்கு இறங்கிய பலர் திரும்ப வரவே இல்லை.. எனவே ஒகேனக்கல் சுற்றுலா வருவோர் கவனமாக இருந்தால் நிம்மதியான பயணமாக இருக்கும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications