கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. திட்ட அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு! மகிழ்ச்சியில் பெண்கள்
சென்னை: மகளிர் உரிமைத் தொகை வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பறந்திருக்கிறது.
குடும்பங்களை வளர்த்தெடுக்க காலங்காலமாக உழைத்து வரும் பெண்கள் தங்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களது உழைப்பு காற்றில் கரைந்த கற்பூரம் போல ஆகிவிடுகிறது. எனவே தங்கள் உழைப்புக்கான அங்கீகாரத்திற்காக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இப்படி இருக்கையில்தான் அரசியல் கட்சிகள் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து பேச தொடங்கின.

அந்த வகையில் குடும்ப பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் உரிமைத்தொகை இன்னும் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இது குறித்து பேசி விமர்சிக்க தொடங்கினர். சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
நிலைமையை கவனித்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பையடுத்து இதற்கான தயாரிப்பு பணிகளை துறை சார்ந்த அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்காது. மாறாக இதனை பெற சில அளவுகோல்களை அரசு அறிவித்துள்ளது. இப்படியாக தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்ட முகாம் ஜூலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரையும் நடைபெறுகிறது. அந்த வகையில் கடந்த 4ம் தேதி முதல்கட்ட சிறப்பு முகாம் முடிவடைந்தது.

தற்போது மக்களிடம் பூர்த்தி செய்து வாங்கப்பட்ட சுமார் 80 லட்சம் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட முகாம் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. தற்போது ஏற்கெனவே பெறப்பட்ட படிவங்கள் அனைத்தும் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பணத்தை பெறுவது தொடர்பாக பெண்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் இருக்கின்றன. அதில் பலரும் அடிக்கடி எழுப்பும் கேள்வி வங்கி கணக்கு குறித்துதான்.
உரிமை தொகை பெற வங்கி கணக்கு கட்டாயம். ஆனால் இந்த அக்கவுண்ட் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? என்பதுதான் இந்த கேள்வி. இதற்கு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். அதாவது, "வங்கி கணக்கு இல்லையெனில் 'இந்தியா போஸ்ட் பேமெண்ட்' வங்கியில் கணக்கு தொடங்கலாம். இந்த அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் கிடையாது.
போஸ்ட்மேன் அல்லது கிராம அஞ்சல் ஊழியர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலம், செல்போன் நம்பர், ஆதார் நம்பரை கொண்டு கைரேகையை வைத்து அக்கவுண்ட்டை தொடங்கலாம். இதனையடுத்து இந்த கணக்கில் செலுத்தப்படும் உரிமை தொகையை போஸ்ட்மேன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்" என தபால்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம் உரிமை தொகை தொடர்பாக அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பறந்திருக்கிறது. அதாவது செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக ஒரு கோடி பேருக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்கும். இந்நிலையில் இந்த 15ம் தேதியன்றே ஒரு கோடி பேருக்கு பணம் செலுத்தப்பட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. எனவே அதிகாரிகள் இதற்காக தயாராகி வருகின்றனர். இந்த உத்தரவால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மகளிருக்கு ₹2,500 உரிமைத் தொகை: ஜூலை பட்ஜெட்டில் பெரிய அறிவிப்பு? நிதியமைச்சர் மரியா வில்சன் தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications