இப்படியா நடக்கணும்! தமிழகத்தில் தெரியாத சூப்பர் ப்ளூ மூன்! மொத்தமாக ஏமாந்த மக்கள்! பின்னணி என்ன?
சென்னை: தமிழகத்தில் பெரும்பலான இடங்களில் இன்று இரவில் நடந்த அரிய நிகழ்வான சூப்பர் ப்ளூ மூனை மக்களால் பார்க்க முடியவில்லை. மேலும் சூப்பர் ப்ளூ முனை பார்க்க ஆவலாக இருந்த மக்கள் பொலிவான பவுர்ணமி நிலவை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்த நிலையில் பின்னணி காரணம் வெளியாகி உள்ளது.
நமது விண்வெளியில் தினமும் பல்வேறு அரிய நிகழ்வுகள் நடக்கின்றன. இதில் சிலவற்றை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். இதில் பல அரிய நிகழ்வுகள் பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும். அந்த வகையில் தான் இன்று வானில் சூப்பர் ப்ளூ மூன் தென்படும்.

இதனை மக்கள் அனைவரும் மிஸ் செய்யாமல் பார்த்து ரசிக்க வேண்டும் விஞ்ஞானிகள் கூறினர். அதாவது சூப்பர் ப்ளூ மூன் என்பது மிகவும் பிரகாசமான பவுர்ணமி நிலவு என நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். இன்னும் புரியும் படி கூற வேண்டும் என்றால் நம் பூமியின் துணைக்கோள் நிலாவாகும். நிலா பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.
இப்படி நீள்வட்டபாதையில் நிலா பூமியை சுற்றும்போது குறிப்பிட்ட இடத்தில் மிகவும் நெருக்கமாகவும், குறிப்பிட்ட இடத்தில் நீண்ட தொலைவிற்கும் செல்லும். நிலா நீள்வட்டபாதையில் சுற்றி பூமிக்கு நெருக்கமாக வரும்போது ஏற்படும் பவுர்ணமியை நாம் ‛சூப்பர் மூன்' என்கிறோம். இது ஆண்டுதோறும் வரும்.
மாறாக ப்ளூ மூன் என்பது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும். இதனை புரிந்து கொள்ள வேண்டும் நாம் லீப் ஆண்டை கணக்கீடுவது போல் கணக்கீடு ஒன்றை செய்ய வேண்டும். அதாவது பூமியை நிலவு சுற்றி வர சராசரியாக 29.5 நாட்கள் ஆகும். இதில் ஒரு பவுர்ணமி வரும். ஆண்டுக்கு 365 நாட்களை வைத்து கணக்கீட்டு பார்த்தால் 12X29.5 நாட்கள் என்ற அடிப்படையில் 354 நாட்களில் மொத்தம் 12 பவுர்ணமி வரும்.
மாறாக 11 நாட்கள் மீதம் இருக்கும். இந்த 11 நாளை போல் அடுத்த ஆண்டில் வரும் 11 நாள் அதற்கு அடுத்த ஆண்டில் மீதம் வரும் 11 நாளில் 7 நாட்களை எடுத்து கொண்டால் ஒரு மாதத்தில் 2வது பவுர்ணமி வந்துவிடும். இது ஒரு அரிய நிகழ்வாகும். இது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிலையில் இன்று சூப்பர் மூன் + ப்ளூ மூன் ஆகியவை சேர்ந்து வந்துள்ளதால் இது சூப்பர் ப்ளூ மூன் என அழைக்கிறோம்.
அதன்படி இன்று நிலா வானில் மிகவும் பொலிவுடன் பிரகாசமாக காட்சியளிக்கும். வழக்கமான பவுர்ணமியுடன் 16 சதவீதம் வரை இன்று நிலா பொலிவுடன் இருக்கும். இதனை மக்கள் அனைவரும் பார்க்கலாம் என்றனர். இதையடுத்து இன்று தமிழக மக்கள் இரவில் இருந்தே சூப்பர் ப்ளூ முனை பார்க்க தயாராக இருந்தனர். ஆனால் தமிழ்நாட்டின் பெரும்பலான இடங்களில் நிலா வரவில்லை.
இதனால் சூப்பர் ப்ளூ முன் என்பது தெரியவில்லை. அதாவது தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் மழை பெய்ததோடு, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் சூப்பர் ப்ளூ மூனை பார்க்க ஆர்வமாக இருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த சூப்பர் ப்ளூ மூன் இனி அடுத்த 2037ல் வரும்.
-
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications