இலையுதிர் காலம் ஓவர்.. எடப்பாடி ஏன் டெல்லி போறார்ன்னு தெரியும்.. சட்டசபையில் ஸ்டாலின் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.. அவர் டெல்லிக்கு யாரை சந்திக்க செல்கிறார் என்று தெரியும்.. என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசி இருக்கிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரின் பயணம் இன்று தமிழக அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த உள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட எடப்பாடி பழனிசாமி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் இன்னொரு முக்கியமான ஒரு தலைவரும் டெல்லி செல்ல உள்ளாராம். டெல்லியில் முக்கிய தலைவர்களையும் ஈபிஎஸ் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பாஜக உடன் கூட்டணி பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது.

I know why is AIADMK Edappadi Palanisamy going to Delhi says CM Stalin in Tamil nadu assembly

அதிமுக - பாஜக கூட்டணி, அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்கள் அதில் இணைவது பற்றி பேசப்படும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக கூட்டணி உருவாகாத நிலையில், தற்போது மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

மீண்டும் சேரும் அதிமுக - பாஜக

பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என அதிரடியாக யோசிக்க முடியாத அளவிற்கு பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இன்னொரு பக்கம் அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை..திமுகதான் எங்கள் ஒரே எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

யார் தலையீடு

இதற்கு பின் கேரளாவை சேர்ந்த தமிழக புள்ளி ஒருவரின் தலையீடுதான் காரணம் என்கிறார்கள். கேரளாவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அந்த தமிழர் தான் கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடியை சந்தித்து பேசி உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பில்தான் அதிமுக - பாஜக கூட்டணி பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இதில் இந்த கூட்டணியை உருவாக்குவதற்கான பாசிட்டிவ் விஷயங்களை எடப்பாடி தெரிவித்து உள்ளாராம். இதனால் பாஜக இன்.. தவெக அவுட் என்கிறார்கள்.

கூட்டணி உருவாகவில்லை

தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Take a Poll

ஸ்டாலின் கமெண்ட்

டெல்லிக்கு செல்லும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.. அவர் டெல்லிக்கு யாரை சந்திக்க செல்கிறார் என்று தெரியும்.. என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசி இருக்கிறார். நீங்கள் டெல்லிக்கு செல்வது ஏன் என்று தெரியும். யாரை பார்க்க போகிறீர்கள் என்று தெரியும். மற்ற விஷயங்களை பேசும் போது.. மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் பேசுங்கள் என்று ஸ்டாலின் கூறி உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயண திட்டம் என்ன?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரின் பயணம் இன்று தமிழக அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த உள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட எடப்பாடி பழனிசாமி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+