கோடையை குளுகுளுவென என்ஜாய் செய்ய.. சென்னைக்கு அருகே உள்ள பட்ஜெட் சுற்றுலா தலங்கள்! லிஸ்ட் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் நிலையில், நகர வாழ்க்கையில் இருந்து எஸ்கேப் ஆக வேண்டும் என நினைக்கும் சென்னைவாசிகள் செல்ல ஏற்ற டாப் 5 இடங்கள் குறித்துப் பார்க்கலாம்.

கோடை வெயில் நம்மை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. மார்ச் மாதம் தொடங்கிய வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

கோடைக் காலம் முடியும் வரை அதிக வெப்பமே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.. கோடைக் காலத்தில் பள்ளி விடுமுறையும் உள்ள நிலையில், வீட்டில் இருக்கும் குட்டீஸ் எல்லாம் விடுமுறைக்கு வெளியே செல்ல வேண்டும் என நச்சரிக்கத் தொடங்குவார்கள்.

Top 5 tourist getaways near Chennai to enjoy this Summer

குட்டிஸ் இருந்தால் மட்டுமன்றி, பொதுவாகச் சென்னை நகரில் வசிக்கும் மக்களுக்குக் கோடை வெயிலில் இருந்து எஸ்கேப் ஆக இதுபோன்ற இடங்கள் தேவைப்படவே செய்கிறது. அது சரி, சில மணி நேரப் பயண நேரத்தில் அமைந்திருக்கும் டாப் 5 சுற்றுலாத் தலங்கள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்த இடங்களுக்குச் செல்ல நமக்குப் பெரிய செலவோ அல்லது பெரிய திட்டமிடலோ தேவையில்லை என்பது இதன் சிறப்பாகும்.

தடா: முதலில் இந்த லிஸ்டில் வருவது. தடா நீர்வீழ்ச்சி.. சென்னையில் இருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த தடா நீர்வீழ்ச்சி சென்னைவாசிகளுக்கு குறிப்பாக இளைஞர்களுக்குப் பரிச்சயமான ஒரு சுற்றுலாத் தலம் தான். ஒரே நாளில் இங்கு ஜாலியாக சென்று திரும்பலாம். பயண டிக்கெட் கூட பெரிதாக முன்பதிவு செய்யத் தேவையில்லை. இங்கு ரயில் மூலமும் செல்லலாம். பேருந்து, டாக்ஸி மூலமும் செல்லலாம்.. நண்பர்கள், குடும்பத்துடன் செல்ல மிகச் சிறந்த இடம்.. கார், பைக்கில் சென்றால் ஒரு லாங் டிரைவ் போலவும் இந்த இடத்திற்குச் செல்ல முடியும்

Top 5 tourist getaways near Chennai to enjoy this Summer

அடுத்து இளைஞர்களின் பேவரைட் புதுச்சேரி. சென்னையில் இருந்து 130 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் இளைஞர்களின் வீக் எண்ட் டூரிஸ்ட் பிளேஸ்.. பிரானஸ் மற்றும் இந்தியக் கலாச்சாரத்தின் வசீகரத்தைக் கொண்டுள்ள புதுச்சேரியில் சுற்றிப் பார்க்க பீச் முதல் ஆரோவில் வரை ஏகப்பட்ட இடங்கள் உள்ளன. மேலும், வித்தியாசமான உணவுகளையும் இங்கே முயன்று பார்க்கலாம். புதுச்சேரிக்கு ரயில், பஸ் என போது போக்குவரத்து மூலமும் செல்ல முடியும். அதேபோல காரை எடுத்தால் லாக் டிரிப் போலவும் என்ஜாய் செய்யலாம்.

Top 5 tourist getaways near Chennai to enjoy this Summer

புலிகாட்: சென்னைக்கு மிக அருகே சுமார் 60 கிமீ தூரத்தில் அமைந்துள்ள மற்றொரு முக்கியமான இடம் புலிகாட் ஏரி.. இங்குள்ள பறவைகள் சரணாலயம் ரொம்பவே புகழ் பெற்ற ஒன்றாகும்.. சென்னையில் இருந்து கிளம்பினால் சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த இடத்தை அடையலாம். இங்கே இடத்தின் அழகு நிச்சயம் உங்களை நிச்சயம் வசீகரித்துவிடும். பறவைகள் மட்டுமின்றி, இங்குள்ள டச்சு கல்லறை, கோட்டை, பழங்கால தேவாலயங்கள் ஆகியவை இங்கு மிஸ் செய்யக் கூடாது இடங்கள் ஆகும்.

அதேபோல இயற்கை பிரியர்களுக்கான மற்றொரு முக்கிய இடம் வேடந்தாங்கல்.. சென்னைக்கு 70 கிமீ தொலைவில் 30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலகளவில் பிரபலமானது.. சீசன் சமயத்தில் அங்கே 30,000 பறவைகள் வந்து செல்லும். இயற்கை மீது அதீத அன்பு, பறவைகள் பிடிக்கும் என்றால் நீங்கள் நிச்சம் செல்ல வேண்டிய ஸ்பாட்டாக வேடந்தாங்கல் இருக்கிறது.

Top 5 tourist getaways near Chennai to enjoy this Summer

ஆன்மீக பிரியர்களுக்கு ஏற்ற இடம் சென்னையிலிருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாகலாபுரம்.. மலைகள், காடு, நீர்வீழ்ச்சிகள் என இயற்கை சூழ்ந்து இருக்கும் இந்த இடத்தில் ஸ்ரீ வேதநாராயண ஸ்வாமி கோயில், ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வர ஸ்வாமி கோயில் என ஆன்மீக இடங்களும் உள்ளது கைலாசகோனா, உப்பலமடுகு என நீர்வீழ்ச்சிகளும் உள்ளது. ஒரு நாள் சுற்றிப் பார்த்து நேரத்தைக் கழிக்க இது ஏற்ற இடம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+