பழைய பென்ஷன்.. தமிழக அரசு எடுக்க போகும் பிரம்மாஸ்திரம்.. எப்போது அமலுக்கு வரும்? ஊழியர்களுக்கு குஷி
சென்னை: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது தமிழக அரசால் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போது இந்த ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதை பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு இது தொடர்பாக ஆய்வு பணிகளை செய்து வருகிறது.
கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System) 01.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.

எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01:04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது.
மாநில அரசின் நிதி நிலையிணையும். பணியளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்போது வரும்?
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது தமிழக அரசால் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலுக்கு 2-3 மாதங்களுக்கு முன்பாக இந்த அறிவிப்பு வரலாம். இந்த திட்டம் காரணமாக கடுமையான நிதி இழப்புகள் தமிழக அரசுக்கு ஏற்படும்.
இதை எல்லாம் கணக்கில் கொண்டு.. நிதி இழப்புகளை குறைக்கும் வகையில் திட்டத்தில் சில மாற்றங்களை செய்த பின்.. இந்த திட்டத்தை அதன்பின் அமல்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறதாம். தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீத ஆதரவு எப்போதுமே திமுகவுக்குத்தான் கிடைக்கும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
அதனால் கடும் அதிர்ப்தியடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து கடந்த லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல்களில் திமுகவுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டும் என தீர்மானித்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் ஆதரவு அதிமுக, பாஜகவுக்கு கிடைத்தது. அதற்கு உதாரணமாக, தபால் வாக்குகளை அளிக்கும் அரசு ஊழியர்கள் வாக்குகள் பெரும்பாலும் அதிமுக, பாஜகவிற்கு சென்றது. இதை மனதில் வைத்தே அரசு ஊழியர்களின் மனதை குளிர்விக்கும் விதமாக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறாராம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications