Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்னிந்தியாவுக்கு டூர் போறீங்களா நீங்க.. வியக்க வைக்கும் வாவ் ஸ்பாட்களை பாருங்க! லிஸ்ட் இதோ

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் பலரும் சுற்றுலாவுக்கு தயாராகி வருகிறார்கள். ஆனால் எந்த இடங்களுக்கு போவது என்கிற குழப்பம் நீடித்து வருகிறது. ஓவராக செலவு இழுக்காமல் பட்ஜெட்டுக்குள் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமாக இருக்கிறது. எனவே அடுத்த முறை சம்மர் ட்ரிப் போகும் முன்னர் இதனை ஒரு முறை படித்துக்கொள்ளுங்கள்.

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மேற்கு தொடர்ச்சி மலையில் வால்பாறை, இடுக்கி, மூணாறு, வாகமண், குன்னூர், மகாபலேஸ்வர், டான்டேலி, கூர்க், தேக்கடி, மோலெம் தேசிய பூங்கா, கல்பெட்டா, அகும்பே, ஏற்காடு என 13 சுற்றுலா தலங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கின்றன. இவற்றில் முதல் இடத்தில் இருப்பது தமிழ்நாட்டின் வால்பாறைதான்.

Tour: Must Visit Places in South India in Summer

தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் உள்ள இந்த வால்பாறையில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருக்கிறது. ஆசியாவின் இரண்டாவது ஆழமான அணையான சோலையாறு அணையும் இங்குதான் அமைந்திருக்கிறது. இது தவிர இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா, கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை வியூ பாயிண்ட், ஆழியார் அணை, லோம்ஸ் காட்சிமுனை, நீரார் அணை, சின்ன கல்லார் நீர்வீழ்ச்சி, காரமலை அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் ஆகியவை சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாகும்.

அதேபோல கேரளாவின் இடுக்கியும் மிக முக்கியமான சுற்றுலா தலமாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் வனவிலங்கு சரணாலயம், தொம்மன்குத்து அருவி, ராமக்கல்மேடு, மங்களா தேவி கோவில், பெரியார் தேசிய பூங்கா, வண்டன்மேடு, அஞ்சுருளி நீர்வீழ்ச்சி, ஹில் வியூ பார்க், கீழர்குத்து அருவி, இளவீழா பூஞ்சிரா, அங்காரா நீர்வீழ்ச்சி, நாடுகாணி, குளமாவு, கவி, அனக்கரா என 15 சுற்றுலா இடங்கள் இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க இடம் என்பது வனவிலங்கு சரணாலயம்தான். இங்கு யானைகள் அதிகளவில் இருக்கின்றன. அதேபோல புலிகளும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றன.

மற்றொரு இடம் தொம்மன்குத்து அருவி. இது மூணாறிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த அருவியில் எப்போதும் நீர் வந்துக்கொண்டே இருக்கும் என்பதால் இந்த சம்மர் சீசனில் ஓய்வெடுக்க மிகச்சரியான இடமாக இது இருக்கிறது. அதேபோல மற்றொரு இடம் அனக்கரா. இது இடுக்கி மாவட்டத்தின் மையத்தில் அமைந்திருக்கிறது. இங்குள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாகும்.

இடுக்கிக்கு அடுத்து உள்ள சிறந்த சுற்றுலா தலம் கேரளாவின் மூணாறு. இங்குள்ள பல இடங்களில் உண்மையிலேயே நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அந்த வகையில் ஆட்டுக்காடு நீர்வீழ்ச்சி, பொதமேடு காட்சி முனை, லாக்ஹார்ட், மலையேற்றத்திற்கு மீசபுலிமாலா, மறையூர் கல்திட்டு, குண்டலா ஏரி, ஆனைமுடி, சொக்ரமுடி சிகரம், ப்ளாசம் பார்க், எக்கோ பாயிண்ட், சின்னக்கானல் நீர்வீழ்ச்சி, தேவிகுளம், இந்தியாவின் முதல் நீர் மின் திட்டம் செயல்படுத்தப்பட்ட பாலிவ்சல், லாக்ஹார்ட் தேயிலை அருங்காட்சியகம் ஆகியவை முக்கியமான இடங்களாகும்.

இடுக்கிக்கு அடுத்து கேரளாவின் வாகமன் எனும் பகுதியும் சிறந்த கோடை வசஸஸ்தலமாகும். இது இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகிறது. சூசைட் பாயிண்ட், சாலையோர அருவி, பைன் மரக்காடுகள், பருந்தன் பாறை, மொட்டக்குன்னு, குடப்பனமூடு, வாகமண் ஹைட்ஸ், தாரன்யகனம், பச்சை புல்வெளிகள், ஜும்மா மஸ்ஜித், இளவேழ பூஞ்சிரா, குருசுமலை ஆசிரமம், குட்டிகானம், முருகன் மலை, வாகமண் தேயிலை தோட்டம், தங்கல் பாறை, உலிபூனி வனவிலங்கு சரணாலயம், இடுக்கி ஆர்ச் அணை, வாகமண் ஏரி, முண்டகாயம் மலை, முறிஞ்சாபுழா நீர்வீழ்ச்சி ஆகிய இடங்கள் நிச்சம் பார்க்க வேண்டிய இடமாகும்.

Tour: Must Visit Places in South India in Summer

வாகமண் பகுதிக்கு அடுத்துள்ள இடம் குன்னூர். தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி அமைந்துள்ளது. இங்கு டால்பின் நோஸ், லாம்ப் பாறை, சிம் பூங்கா, லா நீர்வீழ்ச்சி, மறைமுக பள்ளத்தாக்கு, கட்டாரி அருவி, குவன்சே தேயிலை தொழிற்சாலை, 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட துரூக் கோட்டை, புனித ஜார்ஜ் தேவாலயம் ஆகிய இடங்கள் நிச்சயம் பார்க்க வேண்டியதாகும். பொதுவாக மலைகளில் குளங்களும், அருவிகளும் இருக்கும். ஆனால் ஒரு சில மலைகளில் மட்டும்தான் கோட்டைகள் அமைந்திருக்கும். அப்படியாக சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்ட துரூக் கோட்டை குன்னூரில் அனைவரையும் அதிகம் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது.

இவை தவிர கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என மகாபலேஸ்வர், டான்டேலி, கூர்க், தேக்கடி, மோலெம் தேசிய பூங்கா, கல்பெட்டா, அகும்பே, ஏற்காடு ஆகிய இடங்கள் சம்மரில் சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+