ஆணுறுப்பு படங்கள்.. அதுவும் ஊர் முழுக்க.. இங்கு போய் வந்தாலே பெண்கள் கர்ப்பம் ஆவார்களாம்! வினோதம்

Subscribe to Oneindia Tamil

திம்பு: பூட்டான் நாட்டில் உள்ள ஒரு கிராமம் முழுக்க ஆணுறுப்பு படங்களால் நிரம்பி உள்ளது. வீடு, தெருக்கள் அவ்வளவு ஏன் கோயில் சுவர்களில் கூட ஆணுறுப்பு படங்களே இருக்கிறது. இதற்கான காரணத்தை நாம் தேடினால் அது 15ம் நூற்றாண்டு உடன் ஒரு தொடர்பைக் காட்டுகிறது. ஆச்சரியம் அளிக்கும் இந்த கிராமம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

தெற்கு ஆசியாவில் இமயமலையின் கிழக்கு விளிம்பில் அமைந்துள்ள புத்த நாடு பூட்டான். மொத்தமே 7 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட பூட்டான் சுற்றுலாவுக்குப் பெயர் பெற்றது.

tour bhutan world

ஆணுறுப்புகள்: பூட்டான் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அதன் பசுமையான வயல்வெளிகள், பெரிய புத்தர் சிலைகள் தான். இதற்காகவே பூட்டான் நாட்டிற்குப் பலரும் சுற்றுலா செல்கிறார்கள். ஆனால், அங்கு ஒரு கிராமம் முழுக்கவே ஆணுறுப்பு சுவர் ஓவியங்களால் நிரம்பி இருக்கிறது. நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் இருக்கும் இந்த ஊர் குறித்துப் பார்க்கலாம்.

இந்த கிராமம் பூட்டான் தலைநகர் திம்புவிலிருந்து சுமார் 60 கிமீ தூரத்தில் புனகா பள்ளத்தாக்கில் உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் சோப்சோகா.. உள்ளூர் மொழியில் சோப்சோகா என்றால் தூக்கமில்லா கிராமம் என்று பொருளாம். இந்தக் கிராமம் முழுக்க சுவர் ஓவியங்களால் நிரம்பி இருக்கிறது. ஒவ்வொரு சில மீட்டர் தொலைவிலும் ஆணுறுப்பு படத்தைப் பெரிதாக வரைந்துள்ளனர்.

காரணம்: இந்த விசித்திரமான கிராமத்தில், ஆணுறுப்பை அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு தெருவிலும் வீட்டுக் கூரைகளிலும் கூட ஆணுறுப்பின் படத்தை வரைந்து வைத்துள்ளனர். எல்லா இடங்களிலும் ஆணுறுப்பு படங்கள் முகம் சுழிக்க வைக்கும். ஆனால், இங்கு மட்டும் அதை சர்வ சாதாரணமாக மக்கள் பார்க்கிறார்கள். வீடுகள், பொது இடங்கள் அவ்வளவு ஏன் கோயில் சுவர்களில் கூட ஆணுறுப்பின் போட்டோக்களை நாம் பார்க்கலாம். இவை கெட்ட சக்தியை அழிக்கும் என்று இந்த கிராம மக்கள் நம்புகிறார்கள்.

தினமும் உடலுறவு.. கோடி நன்மைகள் இருக்கு ஓகே.. ஆனால் அந்த 2 பிரச்சனையும் இருக்கே! மருத்துவர் விளக்கம்


இதெல்லாம் எனக்கு செட் ஆகாது. இந்த ஊருக்கு வந்ததன் நினைவாக எதாவது பரிசுப் பொருளை மட்டும் நான் வாங்கிட்டு கிளம்புகிறேன் என்று நினைத்து கடைக்குள் நுழைந்தால், அங்கும் கூட ஆணுறுப்பு படங்களும் பொம்மைகளுமே நிரம்பி இருக்கிறது. அதை மக்கள் ஆர்வமாகவும் வாங்கிச் செல்கிறார்கள்.

15ம் நூற்றாண்டு: இந்த கிராமத்தில் உள்ள வினோதமான பழக்கம் குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், "15 ஆம் நூற்றாண்டு வாழ்ந்த புத்த துறவியான ட்ருக்பா குன்லே என்பவர் தான் இதற்குக் காரணம். அவர் புத்த மதத்தை மக்களிடையே பரப்ப வித்தியாசமான நடைமுறைகளைப் பின்பற்றினார். ஆழமான ஆன்மீக கருத்துகளை நகைச்சுவையாக மக்களிடம் பரப்பினார். அதற்கு அவர் ஆணுறுப்பையும் கூட பயன்படுத்தினார்.

உடலுறவை அதிகம் வைத்தால் உடல் எடை குறையும்.. ஆனா கடைசியில் ஒரு ட்விஸ்ட்! மருத்துவர்கள் தரும் விளக்கம்


கர்ப்பம்: இவரின் மடாலயம் எங்கள் கிராமத்திற்கு அருகே தான் உள்ளது. அதன் காரணமாகவே எங்கள் ஊரில் இந்த நடைமுறை. மேலும், குழந்தை இல்லாதவர்கள் இந்த மடாலயத்தில் வந்து பிரார்த்தனை செய்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒருவேளை இந்த மடத்திற்குச் சென்ற பிறகு தம்பதி குழந்தையைப் பெற்றெடுத்தால்.. அந்த குழந்தைக்குப் பெயரிட மீண்டும் இங்கு வர வண்டும். மூங்கில் சீட்டுகளில் சில பெயரை எழுதிப் போட்டு பெயர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+